தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இறுதி கட்ட பிரச்சாரத்தை நோக்கி அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக களத்தில் வேலை செய்து வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, கடந்த ஒரு வருடத்தில் எப்பபோதும் இல்லாத அளவுக்கு, அடிக்கடி தமிழகம் வந்தார் பிரதமர் மோடி, இதற்கு முக்கிய காரணம், முன்பு எப்பபோதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மோடி சமீப காலமாக தமிழகம் வரும் போது தமிழக மக்கள் கொடுக்கும் உற்சாக வரவேற்பும் மீண்டும் மீண்டும் பிரதமரே விருப்பப்பட்டு தமிழகம் வந்தார் என கூறப்படுகிறது.
இம்முறை தென் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மிக பெரிய வெற்றியை பெற்ற ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரதமர் மோடி அதற்கான தேர்தல் வியூகங்கள் குறித்து தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கடந்த ஆறு மாதங்களாக தொலைபேசியில் பேசி ஆலோசனை நடத்தி வந்துள்ளார். குறிப்பாக அண்ணாமலை மீது மிக பெரிய நம்பிக்கையை வைத்துள்ள பிரதமர், தமிழகத்தில் இருந்து குறைந்தது 5 அமைச்சர்கள் இம்முறை இடம் பெற வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை அண்ணாமலையிடம் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய ஆரம்பத்தில் மும்முனை போட்டி என்று கூறப்பட்டாலும் கூட, பாஜகவின் தீவிர தேர்தல் பணி, திமுக – பாஜக என நேரடி போட்டியாக உருவெடுத்துள்ளது. மேற்கு மண்டல் மற்றும் தென் மாவட்டங்களில் பாஜக சாதகமாக தேர்தல் காளம் மாறி உள்ள நிலையில், சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த பின்பு சென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள தொகுதிகளிலும் பாஜகவுக்கு சாதகமாக களம் மாறி கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை வந்து திரும்பிய பிரதமர் மோடி தமிழக தேர்தல் களம் நிலவரம் குறித்து உளவு துறை மூலம் கேட்டு தெறித்து கொண்டுள்ளார், அதில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் எது.? கடும் போட்டியாக யார் வெற்றி பெறுவார்கள் என கணிக்கவே முடியாத தொகுதிகள் எது.? இரண்டாம் இடம் பெற இருக்கும் தொகுதிகள் எது.? என்பதை உளவுதுறை மூலம் தெரிந்து கொண்ட பிரதமர் மோடி.
மிக கடுமையாக போட்டியிருக்கும் தொகுதிகளில், எந்த மாதிரியான பிரச்சார யுக்திகளை கையாண்டால் வெற்றி பெறலாம், இரண்டாம் இடம் பெரும் என கணிக்கப்படும் தொகுதிகளில் எப்படி தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது என்கிற தகவல்களையும் சேகரித்து கொண்ட பிரதமர் மோடி, உடனே அண்ணாமலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை குறிப்பிட்டு சொன்னவர், கடும் போட்டியாக இருக்கும் தொகுதியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், அப்படி செலுத்தினல் இம்முறை இரட்டை இலக்கில் மிக பெரிய வெற்றியை தமிழகத்தில் பெற்றுவிடலாம் என அண்ணாமலையிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து கடும் போட்டியாக இருக்கும் தொகுதிகளின் பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தேர்தல் பணியை தீவிர படுத்த அண்ணாமலை வலியுறுத்தியதை தொடர்ந்து தேர்தல் பணியை தீவிர படுத்தி வருகிறார்கள் பாஜக நிர்வாகிகள். இந்நிலையில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க தேர்தல் கள நிலவரம் மாறும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக திமுக – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் தொகுதிகளில் பாஜக வெற்றியை உறுதி செய்யும் வகையில் தேர்தல் களம் இனி வரும் நாட்களில் மாறும் என்கிறது தேர்தல் களநிலவரம்.