கடவுள் போல் அவதரித்து மாற்று திறனாளி குழந்தையின் தாய்க்கு உதவிய பாலா…

0
Follow on Google News

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார்.

முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ தேவைக்காக மக்கள் பயன்படுத்த ஆட்டோ வழங்குவது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா. பாலா சிறந்த நடிகர், காமெடியன் என்பதை தாண்டி, மனிதநேயம் மிக்கவர் என்பதை சமீப காலமாக நிரூபித்து வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தை தன்னுடைய குடும்பத்திற்கு சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை, ஏழை எளிய மக்களுக்கு செலவழித்து வருகிறார். இதுவரை மலை கிராம மக்களுக்கு உதவும் நோக்கிலும், ஆதரவற்றோருக்கு உதவும் நோக்கிலும், ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ள பாலா, மழை வெள்ளம் சென்னை பகுதியை சூழ்ந்த போது , தன் கையில் இருந்த மொத்த பணத்தையும், ஏழை எளிய மக்களுக்கு கொடுத்தார்.

KPY பாலா தான் செய்து வரும் தொடர் உதவிகளால் மக்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். பொது மக்களிடமிருந்து அவருக்கு பல கோரிக்கைகளும் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் தான் திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேனிலைப்பள்ளியில், பல காலமாக மாணவர்கள் கழிப்பறை வசதி இன்றி அவதிப்படுவதாகவும், அதை நிறைவேற்றி தர வேண்டுமென்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

KPY பாலா இந்த கழிப்பறை வசதியை மேம்படுத்த உடனடியாக 5 லட்சம் முன்பணம் அளித்தார், மேலும் இந்த கழிப்பறை வசதியை தன்னால் முழுமையாக செய்து தர முடியாதென்பதால், நடிகர் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை அணுகியுள்ளார். உடனடியாக உதவ வந்த ராகவா லாரன்ஸ் மாஸ்டர், பாலாவை பாராட்டியதுடன், வெகு உற்சாகமாக உதவிப்பணிகளை தானும் இணைந்து செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார்.

இப்படியான நிலையில் பாலாவுடன் நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இணைந்து கஷ்டப்படும் மக்களுக்கு உதவி வருகிறார்கள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளியில் கழிப்பிடம் கட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் கஷ்டப்படும் பெண்ணுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்தார்கள்.

இந்நிலையில் தன்னுடைய இரண்டு மாற்று திறனாளிகள் குழந்தையை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த ஏழை தாய்க்கு உதவி செய்துள்ளார் பாலா. இது குறித்து பாலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாற்றுத் திறனாளிகளான இந்த அழகான குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் என்னிடம் வாகனம் கேட்டார்கள். எனவே நானும் எனது ரோல்மாடல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் சேர்ந்து இந்த அழகான குடும்பத்திற்கு இந்த வாகனத்தை வாங்குவதற்கு சமமாக பணத்தை பகிர்ந்து கொண்டோம்” என தெரிவித்துள்ளார். பாலா மற்றும் ராகவா லாரன்ஸின் இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.