ஆட்டுக்குட்டியை தூக்கிய டி.ஆர்.பி.ராஜா… பதிலுக்கு சரக்கு பாட்டிலை தூக்கி சம்பவம் செய்த திருச்சி சூர்யா… இந்த அவமானம் தேவை தானா.?

0
Follow on Google News

சமீபத்தில் கோவையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவை தெப்பக்குளம் பகுதியில் ஆட்டுக்குட்டியை தூக்கி பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சனம் செய்து இருந்தார், எந்த இடத்தில் ஆட்டுக்குட்டியை தூக்கி டிஆர்பி ராஜா பிரச்சாரம் செய்தாரோ, அதே கோவை தெப்பக்குளம் பகுதியில் திறந்த வேனில் பிரச்சரம் செய்த திருச்சி சூர்யா, இனி அமைச்சர் டிஆர்பி ராஜா வாயே திறக்க முடியாதபடி தரமான சம்பவம் செய்துள்ளார்.

திறந்த வேனில் பிரச்சாரம் செய்த திருச்சி சூர்யா அங்கே பெரும் கூட்டமாக கூடி இருந்த மக்கள் மத்தியில் கோட்டார் சரக்கு பாட்டிலை தூக்கி காண்பித்து, எங்க தலைவரை விமர்சனம் செய்த டிஆர்பி ராஜாவுக்கு இருக்கும் ஒரே தகுதி இது தான் என சரக்கு பாட்டிலை தூக்கி காண்பித்து, சாராய கம்பெனி வைத்திருக்கும் டிஆர்பி ராஜா தயாரிக்கும் கோட்டார் சரக்கு விலை 60 ரூபாய் தான், ஆனால் அதிகபட்சம் 200 ரூபாய் வரை இந்த கோட்டரை விற்கிறார்கள்.

புகையிலையை ஊற வைத்து தான் இந்த சரக்கை தயாரிக்கிறார்கள், இந்த சரக்கை வாங்கி குடித்துவிட்டு ஒரு வருடத்திற்கு மேல் உயிர் வாழ்ந்து விட்டால்,அமைச்சர் டிஆர்பி ராஜா உங்களுக்கு 1 லட்சம் கொடுப்பார், இது டிஆர்பி ராஜா கேரண்டி என திருச்சி சூர்யா பேசிய போது அங்கிருந்த மக்கள் மத்தியில் ஒரே சிரிப்பலையை பார்க்க முடித்தது. மேலும் டிஆர்பி ராஜா வரும் விலை உயர்ந்த கார் அனைத்தும் அவருடைய சாராய கம்பெனி பெயரில் பதிவு செய்யபட்ட கார் தான் என பேசிய திருச்சி சூர்யா..

மேலும் அரசாங்க அனுமதியுடன் சாராயம் காச்சுவது தான் டிஆர்பி ராஜாவோட தகுதி, நீயெல்லாம் எங்க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தகுதியை பற்றி பேசலாமா என திருச்சி சூர்யா திறந்த வேனில் கோட்டார் சரக்கு பாட்டிலை தூக்கி பிரச்சாரம் செய்தது அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்து, இது மாதிரி பதிலடி கொடுத்த தான் டிஆர்பி ராஜா போன்றோர்கள் வாயே திறக்கமாட்டார்கள் என திருச்சி சூர்யா பிரச்சாரத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.