தமிழகத்தில் பாஜக 40சதவிகிதத்திற்கு மேல் பெரும் தொகுதிகள் எது.? தலைகீழாக மாறிய தமிழக தேர்தல் களம்..

0
Follow on Google News

நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 27 முதல் 34 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் 44 தொகுதிகல் மட்டுமே இந்தியா முழுவதும் வெற்றி பெற்று இருந்தது, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 53 தொகுதிகல் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது, ஆனால் இம்முறை வெறும் 27 முதல் 34 தொகுதிகள் வரை தான் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது.

அந்த வகையில் கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட தக்க வைக்க முடியாத காங்கிரஸ், அதே தான் இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் காங்கிரஸ் கட்சி இழக்கும் என்று கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு தனியாக பாஜக மட்டும் 330ல் இருந்து 345 தொகுதிகள் வெற்றி பெறும் என்றும், பாஜக கூட்டணிகள் 380 லிருந்து 395 தொகுதிகள் வரை வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு 23 லிருந்து 27 தொகுதிகள் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தது எட்டு தொகுதிகள் இருந்து அதிகபட்சம் 15 தொகுதிகள் வரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் பாஜகவின் வாக்கு சதவீதம் தற்போதைய களநிலவரப்படி சுமார் 40 சதவீதத்திற்கு மேல் பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, தேனி, தர்மபுரி, வேலூர், ராமநாதபுரம் போன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகள் இன்றைய கள நிலவரப்படி 35 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளன, மேலும் நீலகிரி, சிதம்பரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி போன்ற தொகுதிகள் பாஜக கூட்டணி கட்சிகள் 30 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெறக்கூடிய தொகுதிகளாக மாறி உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் திமுக மட்டும் தனித்து 13 தொகுதிகளில் இருந்து 17 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் மொத்தம் 23 தொகுதிகளில் இருந்து 27 தொகுதிகள் வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்னர். திமுக தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் சுமார் 4 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தற்போது தள்ளப்பட்டுள்ள சூழலும் உருவாகியுள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிமுகவிற்கு மூன்று இடங்களுக்கு மேல் டெபாசிட் காலியாகும் என்றும் கருத்துக்கணிப்புகள் உறுதிப்படுத்தி உள்ளனர். அதே நேரத்தில் அதிமுக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்கிறது கருத்து கணிப்புகள், சில இடங்களில் இரண்டாவது இடம் வேண்டுமானால் அதிமுக பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதே தவிற, அதிமுக வெற்றி பெறுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தொகுதிகளிலும் டென் படவில்லை என உறுதி படுத்துகிறது கருத்து கணிப்புகள்.