நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தமிழக்த்தில் அனல் பறந்து கொண்டிருக்கையில், நாளுக்கு நாள் தேர்தல் கள நிலவரம் மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற அணைத்து இடங்களிலும் வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு மிக சவாலாக அமைத்துள்ளது தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு, அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் கட்டியமைக்க பட்டிருந்தது போலி பிம்பத்தை நம்பி மக்கள் ஏமார்ந்து ஒட்டு போட்டது போன்ற மனநிலையில் இன்று தமிழக மக்கள் இல்லை, அந்த அளவுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடியமைக்கப்பட்டிருந்த போலி பிம்பத்தை கடந்த இரண்டு வருடத்தில் சுக்கு நூறாக உடைத்து தமிழக மக்கள் மத்தியில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்து விட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை என்றே சொல்லும் அளவுக்கு தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக அமைத்துள்ளது.
மேலும் ஆளும் திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் தமிழக மக்கள் இருந்து வருவதால், கடந்த தேர்தலில் திமுக கூட்டணி வாங்கிய வாக்குகளில் இருந்து இம்முறை சுமார் 5 சதவீகிதம் முதல் 6 சதவிகிதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு குறையும் என்றே தேர்தல் கள நிலவரம் தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் அதிமுகவினர் பெருசாக தேர்தலில் வேலை செய்வதர்க்கு ஆர்வம் காட்டவில்லை, தேர்தல் செலவுக்கு வருகின்ற பணத்தை சுருட்டிவிட்டு படுத்து விடுவோம் என்கிற எண்ணத்தில் அதிமுகவினர் உள்ளதால், இந்த தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுகவை கருத்தில் கொள்ள வேண்டாம் என்கிற சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணிக்கு மிக பெரிய சவாலாக, நிச்சயம் இந்த தொகுதிகளில் திமுக கூட்டணியை பாஜக கூட்டணி வீழ்த்தும் என உறுதியாக சொல்ல கூடிய டாப் 10 தொகுதிகளில், கோவை, வேலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி, கரூர், சிதம்பரம், விருதுநகர் ஆகிய பத்து தொகுதிகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமைத்துள்ளது.
இதில் கோவையில் போட்டியிடும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சாதகமாகவே உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அதிமுக, திமுக கூட்டணி இல்லாமல், பாஜக தனித்து போட்டியிட்டு இரண்டாவது இடம் பிடித்தது, ஆனால் 2019ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக வெற்றி பெறாததற்கு முக்கிய காரணம், கோவை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பும் எதிர்ப்பும் தான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
அந்த வகையில் இம்முறை பாஜக தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் கோவை தொகுதியில் பாஜகவுக்கு கிடைத்து வரும் மக்கள் ஆதரவுமூலம் அண்ணாமலை கோவை தொகுதியில் தன்னுடைய வெற்றியை உறுதி செய்துவிட்டார் என்றே சொல்லலாம். அதே போன்று 2014 அதிமுகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக்கு இம்முறை அதே கால கட்ட அரசியல் சூழல் மீண்டும் உருவாகி, கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதியில் பாஜவுக்கான வெற்றி மிக பிரகாசமாக உள்ளது.
மேலும் வேலூர் தொகுதியில் போட்டியிடும் AC சண்முகம், தேனியில் TTV தினகரன், ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர் செல்வம், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன, விருதுநகரில் ராதிகா சரத்குமார், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் கார்த்திகாயானி, மற்றும் கரூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில் நாதன் ஆகியோர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமா உள்ளதால், தற்போதைய தேர்தல் கள நிலவர படி நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக்தில் பாஜக அடைய இருக்கும் வெற்றியின் மூலம் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து விட்டது என்றே சொல்லலாம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.