செந்தில் – கவுண்டமணி படத்தில் வரும் காமெடி காட்சி போன்று அமைந்து விட்டது எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை. சேதுபதி IPS படத்தில் கப்பலில் வேலை என ஒரு பண்ணி சொன்னதை நம்பி இருந்த வேலையை விட்டுட்டு போய்ட்டேன் அய்யா, ஆனால் போன பின்னாடி தான் தெரிந்தது அந்த பண்ணி என்னை ஏமாற்றி விட்டது, திரும்ப என்னை வேலைக்கு சேர்த்துகங்க அய்யா என்று. நம்பியரிடம் கவுண்டமணி கெஞ்சுவது போன்று பாஜகவிடம் கெஞ்சும் நிலைக்கு எடப்பாடி நிலை அமைத்துள்ளது.
இதில் கவுண்டமணியை ஏமாற்றிய செந்தில் போன்று எடப்பாடி யை ஏமாற்றியது வேறு யாரும் இல்லை, நடிகர் விஜய் தான். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை விட்டு வெளியே வந்தால், திருமாவளவன், காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரும் என கனவு கோட்டையில், மேலும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தான் ஆட்சியை இழந்தோம் என்றெல்லாம் பேசினார் எடப்பாடி பழனிச்சாமி.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி எதிர்பார்த்தது போன்று திருமாவளவன், காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் போன்ற எந்த கட்சிகளும் அதிமுக உடன் கூட்டணி வைக்க வரவில்லை, மாறாக அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, ஜி கே வாசன், AC சண்முகம் போன்றவர்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர், மாறாக எடப்பாடி உடன் மன்சூர் அலிகான் போன்றோர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களும் அதிமுகவுடம் கூட்டணி வேண்டாம் என வெளியேறி சம்பவம் அரங்கேறியது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பல இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாவது இடம் பிடித்தது, அதிமுக சுமார் 7 இடங்களில் டெபாசிட் இழந்தது. இதனை தொடர்ந்து விஜய் கட்சி தொடங்க போகிறார், வரும் 2026 சட்டசபை தேர்தலில் விஜய் உடன் அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் என அதிமுக தொண்டர்களை ஏமாற்றி வந்தார் எடப்பாடி.
ஆனால் மறுபக்கம் அதிமுகவில் இருந்து எடப்பாடியை வெளியேற்றிவிட்டு எடப்பாடி இல்லாத செங்கோட்டையன் தலைமையில் SP வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டனர். இந்த நிலையில் விஜய் அதிமுக உடன் கூட்டணிக்கு வருவார் என கட்சி தொண்டர்களை ஏமாற்றி வந்த எடப்பாடிக்கு இடியாய் விழுந்துள்ளது தற்பொழுது பிரசாந்த் கிஷோர் சொன்ன விஷயம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரசாந்த் கிஷோர். 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே விஜய்யின் முடிவு. அதிமுக விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும், விஜய்க்கு அதிமுக உடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என ஒரே போடாக போட்டு உடைத்து விட்டார் பிரசாந்த் கிஷோர்.
இந்நிலையில் ஒரு பக்கம் யாரும் கூட்டணிக்கு வரவில்லை, மறுப்பக்கம் அதிமுகவில் இருந்து எடப்பாடியை வெளியே அனுப்பும் வேலை நடக்கிறது, இதனை தொடர்ந்து செந்தில் கவுண்டமணி காமெடியில் வருவது போன்று, ஐய்யா… கையை காலா நினைக்கிறன், பாஜக உடன் கூட்டணி வைக்கிறேன், அதிமுகவில் இருந்து என்னை வெளியேற்றி விடாமல் காப்பாற்றுங்கள் என பாஜக கதவை தட்டி தூது அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு டெல்லி பாஜக மேலிடத்திற்கு அண்ணாமலை ஒரு உறுதி மொழி கொடுத்து இருக்கிறார், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு எடப்பாடி தலைமையிலான அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுக – பாஜக தான் தமிழகத்தின் பிரதான கட்சியாக மாற்றி காண்பிக்கிறேன் என்று, அந்த வகையில் அண்ணாமலை சொன்னதை நிரூபித்து விட்டார் என்கிற மகிழ்ச்சியில் இருக்கும் பாஜக டெல்லி தலைமை, எடப்பாடி இல்லாத அதிமுகவை மட்டுமே பாஜக ஏற்று கொள்ளும் என்பதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.