100 கோடி பணம் …. கே என் நேரு குடும்ப உறுப்பினர்களை சுற்றி வளைத்த அமலாக்க துறை…

0
Follow on Google News

அதிகாலை அதிரடியாக இறங்கிய அமலாக்கதுறை அதிர்க்காரிகள், திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். அமலக்கத்துறை அதிகாரிகள் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் திமுக நாடாளுமன்ற தொகுதி உறுப்பினறுமான அருண் நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அருண் நேருவுக்கு சொந்தமான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள GSNR Rice Industrial Pvt limited என்ற நிறுவனத்திலும், அவரது சகோதரரான கே.என் ரவிச்சந்திரன் தொடர்புடைய TVH Novella New நிறுவனத்திலும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் கே.என்.நேருவின் மற்றொரு சகோதரரான மணிவண்ணனின் வீடு கோவை, சிங்காநல்லூர் அருகில் உள்ள மசக்காளிபாளையம் டி.வி.எச் ஏ காந்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ளது. காலை அவரது வீட்டிற்கு

3 கார்களில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கே.என். நேருவின் சகோதரி உமா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

மேலும், கோவை மசக்காளிபாளையம் பகுதியில் டிவிஹெச் ஏகாந்தா குடியிருப்பில் உள்ள கே.என்.நேருவின் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக அமைச்சர் கே .என். நேருவின் சகோதரர் ரவியின் வங்கி கணக்கிலிருந்து அதிகபடியான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தற்போது முதற்கட்ட தகவல் தகவல் கூறப்படுகிறது.

கே என் நேரு சகோதரர், ரவிச்சந்திரன் தொடர்புடைய கோவையில் உள்ள TVH நிறுவனத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. True value home என்ற TVH கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதற்கு முன்னர், இந்த நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில்,ரூ.100 கோடி பணமும், 90 சவரன் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த தகவல் அறிந்து வீட்டில் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் கடந்த காலங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்க துறை சோதனையில், சோதனை நடைபெற்ற இடத்திற்கு செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் திரண்டு, அங்கே அமலாக்க துறை அதிகாரிகள் வாகனம் அடித்து நொறுக்கினார்கள்.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணி செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டானர், இதனால் கோபம் அடைந்த அமலாக்க துறை அதிகாரிகள், செந்தி பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள், நினைத்தது போன்று செந்தில்பாலாஜியை தூக்கி உள்ளே வைத்தனர், சுமார் ஒன்றரை வருடம் போராடி ஜாமின் பெற்று வெளியே வந்தார் செந்தில் பாலாஜி.

அப்படி ஒரு சூழல் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் நேர்ந்தால், அமலாக்க துறை அதிகாரிகள் கோபத்துக்கு உள்ளாகி, செந்தில்பாலாஜிக்கு நடந்தது போன்று கே என் நேருவுக்கும் நிகழ்ந்து விட கூடாது என்பதற்காக, கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை ரெய்டு குறித்த தகவல் அறிந்து வீட்டில் குவிந்து வருவதால் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here