பாராளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி கொண்டிருக்கையில், இதுவரை மும்முனை போட்டி என சொல்ல பட்ட தமிழகத்தில் பல தொகுதிகள் திமுக – பாஜக என நேரடி போட்டியாக மாறியுள்ளது, அந்த அளவுக்கு பாஜக கூட்டணி காட்சிகளுக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக்தில் பாஜக பெரும் வெற்றியின் மூலம் மிக பெரிய அடித்தளத்தை தமிழகத்தில் அமைக்கும் என்பதில் சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தமிழக அரசியல் களம் பாஜகவுக்கு சாதகமாக அமைத்துள்ளது.
இந்நிலையில் தமிழக தேர்தல் களம் குறித்த ரிப்போர்ட் உளவு துறை மூலம் அறிந்த கொண்ட பிரதமர் மோடி மிக பெரிய மகிழ்ச்சியில் உள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திற்கு முக்கிய துவம் அளிக்கும் வகையில் முன்றாவது முறை பிரதமராக பதவி ஏற்க இருக்கும் மோடி தன்னுடைய புதிய அமைச்சரவையில் குறைத்து தமிழகத்தில் இருந்து 5 அமைச்சர்கள் இடம் பெற வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை கடந்த முறை தமிழகம் வந்த போதே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்கத்தில் வெற்றியை உறுதி செய்யும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் யார் என்கிற பட்டியல் பிரதமர் கையில் உளவு துறை மூலம் சென்றுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதை அறிந்து கொண்ட பிரதமர் மோடி செம்ம குஷியில், தமிழகத்தில் வீதியில் இறங்கி தமிழக மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்ய விருப்பம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தி இருக்கிறார் பிரதமர் மோடி.
இதற்காக தமிழகத்தில் மட்டும் நான்கு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி, வரும் 9ம் தேதி வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகம மற்றும் சென்னையில் உள்ள மூன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி, சென்னை பாண்டி பஜாரில் பேரணியில் பங்கேற்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு கேட்க இருக்கிறார். சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த வெள்ள பாதிப்பு, கிளப்பாக்கம் பேருந்து நிலையத்தினால் மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்கள், என திமுக அரசு மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சென்னை மக்கள் மத்தியில் பாஜவுக்கான ஆதரவு மனநிலையை பார்க்க முடிகிறது.
சென்னையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு 10ம் தேதி நீலகிரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை ஆகியரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, அடுத்து 13 மற்றும் 14 தேதிகளில் பெரம்பலூர் தொகுதியில் பரிவேந்தரை ஆதரித்தும், விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி.
தமிழக அரசியலில், தற்பொழுது கள நிலவரப்படி, பல இடங்களில் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் இடையில் நேரடி போட்டியாக இருந்து வந்தாலும், சில இடங்களில் மும்முனை போட்டியாக இருந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரத்தில் மேற்கொள்ளும் போது, மும்முனை போட்டி இரண்டு முனை போட்டியா மாறி பாஜகவா திமுகவா என்கிற அரசியல் களம் மாறும் சூழல் உருவாகும் வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.
மேலும் தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக பலமாக அமைத்துள்ள கூட்டணி என்பதால், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்கள். இதில் தேனி தொகுதியில் போட்டியிடும் TTV தினகரன் மற்றும் தென்காசி தொகுதியில் போட்டியிடும் ஜான் பாண்டியன் மற்றும் சில தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பேரணி மூலம் மக்களை நேரடியாக சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வாக்கு கேட்க இருக்கிறார். இந்த அளவுக்கு பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர் அமித்சா இருவரும் தமிழகத்தில் நேரடியாக மக்கள் மத்தியில் வாக்குகளை கேட்க இருப்பதற்கு, தமிழக அரசியல் களம் பாஜகவுக்கு சாதகமா இருக்கிறது என்கிற உளவு துறை கொடுத்த ரிப்போர்ட் தான் அவர்களை இந்த அளவுக்கு உற்சாகமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வைத்துள்ளது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.