திமுக அமைச்சர்களுக்கு எதிரான டாக்குமென்ட்டுகள் தயார்..! திமுக ஆட்சியை உலுக்கி எடுக்க பாஜக பலே திட்டம்…

0

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்கள் ஊடகவியாளர்கள் என்கிற போர்வையில் இருக்க கூடிய சில திமுக ஆதரவாளர்கள். பெரும்பாலான ஊடகங்கள் திமுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிக்கும் பெரும்பாலன ஊடகங்கள் திமுகவுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிடுவது, விவாத நிகழ்ச்சிகளை நடத்தியது தான் என கூறப்படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப பெண்களுக்கு மாதம் தலா ரூ.1000, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை ஏன் வாக்குறுதிகள் நிறைவேற்ற படவில்லை என கேள்வி எழுப்ப வேண்டிய பெரும்பாலான ஊடகங்கள் வாய் மூடி அமைதியாக இருக்கின்றன, மேலும் தற்போது திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பெரும்பாலான ஊடகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் நடக்கும் அவலங்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் செய்யும் தவறுகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் வகையில் பாஜகவை சார்ந்த சமூக ஊடகங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் பாஜக ஆதரவாளரான பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் செயல்பட்டு வந்தார். இது திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்ததது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடர்ந்து திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றவர்கள் கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து திமுகவை விமர்சனம் செய்து வந்த மாரிதாஸ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று திமுகவுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றவர்களை கைது செய்து சிறையில் அடைந்துவிட்டால், தனது அதரவு ஊடகங்கள் என்ன செய்தி வெளியிடுகிறதோ அது தான் மக்கள் நம்புவார்கள் என திட்டமிட்டு திமுக செயல்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் மாரிதாஸ் கைது விவகாரத்தை பாஜக மிக சீரியசாக கையில் எடுத்துள்ளது. பாஜக வழக்கறிஞர் பிரிவு முழு வீச்சில் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் பத்திரியாகையாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை மிக கடுமையாக எச்சரித்தார். மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து திமுக அரசின் அடக்குமுறைக்கு எதிராக புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லி பாஜக தலைமையிடம் இந்த தகவல் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு திமுக அமைச்சர்களுக்கு எதிரான முக்கியமான டாக்குமென்ட்டுகள் தயார் செய்ய டெல்லியில் இருந்து வந்த தகவலை தொடர்ந்து, முதலில் பத்து அமைச்சர்களை மட்டும் பட்டியலிட்டு அந்த அமைச்சர்களுக்கு எதிரான டாக்குமென்ட்டுகள் தயார் செய்து டெல்லிக்கு அனுப்பும் பணியில் தமிழக பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே தங்கள் கைவசம் இருந்த திமுக அமைச்சர்களுக்கு எதிரான டாக்குமென்ட்டுகள் குறித்து டெல்லி தலைமையிடம் தமிழக பாஜக தலைமை தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில். மேலும் டாக்குமென்ட்டுகள் தயார் செய்து ஆளுநரை சந்தித்து புகார் தெரிவிக்கவும், மேலும் தங்களுக்கு அனுப்பவும் டெல்லி தலைமை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக அமைச்சர்களுக்கு எதிரான டாக்குமென்ட்டுகளை வைத்து இந்த ஆட்சியை நாம் உலுக்கியெடுக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தீவிரமாக களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

டேய்…தம்பி சூர்யா ..இனி உன் படம் தியேட்டரில் ஓடாது… புரட்சி பேசும் நடிகர்கள்… மீடியா… பேடிகள் எங்கே.?

error: Content is protected !!