நீட் தேர்வு மசோதாவிற்கு காலம் தாழ்த்த வேண்டாம்…! ஆளுநரிடம் திருமாவளவன் கோரிக்கை…!

0
Follow on Google News

தமிழகத்தில் நீட் தேர்வு மசோதவிற்கு ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தாமல் மிக விரைவாக அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

சென்னையில் ஆவடியில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில், மறைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை மாநில செயலாளரான மகாதேவனின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர் தலைவர் தொல்.திருமாவளவன்.

இதான் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன் கூறியது : தனக்கு தமிழகத்தில் மாநில வளர்ச்சிக்கு குழுவில் பொறுப்பு வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மருத்துவ படிப்பிற்கான நடத்தப்படும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிலைப்பாடாக இருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.

தமிழக அரசு கொண்டு கொண்டுவந்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதவிற்கு தமிழக ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தாமல் விரைவாக ஒப்புதல் வழங்கி, அதை உடனடியாக குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.