திமுக முக்கிய 3 அமைச்சர்கள் போர் கொடி… எந்த நேரமும் வெடிக்கும் உட்கட்சி மோதல்…

0
Follow on Google News

2026சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் திமுக தலைமையின் ஒரு தலை பட்சமான நகர்வுகளால், திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள் மூன்று திமுக முக்கிய அமைச்சர்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த மூன்று முக்கிய திமுக அமைச்சர்களை திமுக முதல் குடும்பம் படி படியாக ஓரம் கட்டி வரும் நிலையில், திமுக தலைமைக்கு எதிராக போர் கொடி தூக்க தயாராகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மூன்று முக்கிய அமைச்சர்களில் கே என் நேரு ஒருவர். திமுக தலைவர் கருணாநிதி திமுக தலைவராக இருக்கும் வரை திருச்சி திமுக என்றாலே கே என் நேரு தான், அவரை ஆலோசித்து தான் திருச்சியில் கருணாநிதி எதுவும் செய்வார், அப்படி இருந்த கே என் நேருவை மெல்ல மெல்ல திருச்சி அரசியலில் இருந்து ஓரம் கட்டி அங்கே அன்பில் மகேஷ்க்கு திமுக முதன்மை குடும்பம் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கே என் நேரு தன்னுடைய மகன் அருண் நேருவை திருச்சியில் போட்டியிட வைக்க அணைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தார், ஆனால் திருச்சியில் கே என் நேரு மகன் போட்டியிட்டு எம்பியானால், மீண்டும் திருச்சியில் கே என் நேரு கை ஓங்கும் என்பதால், கேன் நேரு மகனுக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்கியது திமுக. மேலும் இதுவரை கேன் என் நேரு மகன் அருண் நேரு திருச்சி அரசியலுக்கு நுழைய விடாமல் பார்த்து வருகிறார் திமுக முதல் குடும்பத்தின் செல்ல பிள்ளையான அன்பில் மகேஷ்.

மெல்ல மெல்ல கே என் நேருவை ஓரம் கட்டி, அன்பில் மகேஷ் திருச்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்பொழுது கே என் நேருவுக்கு போட்டியாக திருச்சி சிவா வுக்கு திமுக துணை செயலாளர் பொறுப்பு கொடுத்துள்ளது திமுக தலைமை, அந்த வகையில் கே என் நேரு கை மொத்தமாக திருச்சி திமுக அரசியலில் வீழ்ந்துள்ள நிலையில், அன்பில் மகேஷ் ஆதிக்கமும், திருச்சி சிவா கையும் திருச்சி திமுகவில் ஓங்கியுள்ளது.

இப்படி கே என் நேருவை திருச்சி அரசியலில் இருந்து ஓரம் கட்டி வரும் திமுக தலைமை, எந்த விதத்திலும் கே என் நேரு மகன் அருண் நேருவும் திருச்சி அரசியலில் தலையிட முடியமால் செய்து வருகிறது இதனால் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் கே என் நேரு இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே போன்று மற்றொரு அமைச்சரான திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

தன்னுடைய மகன் கதிர் ஆனந்துக்கு கட்சியில் மாநில அளவில் பொறுப்பு வாங்க வேண்டும், அல்லது மாவட்ட செயலாளர் பொறுப்பு வாங்க வேண்டும், தனக்கு அடுத்து தன்னுடைய மகனை அரசியலில் வளர்த்து விட வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தினார் துரைமுருகன், ஆனால் அதற்கான வாய்ப்பை திமுக தலைமை துரைமுருகனுக்கு வழங்க வில்லை இதனால் திமுக முதல் குடும்பத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் துரை முருகன்.

அதற்கு அடுத்தபடியாக சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சைவம் – வைணவம் குறித்து பேசிய சர்ச்சை பேச்சுக்கு அவருடைய பதவி பறிக்கப்பட்டு, அவரின் மொத்த அரசியலையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது முதல் குடும்பம். இது பொன்முடி எதுலையாவது சிக்குவார் அவரை பதவியில் இருந்து தூக்கி விட வேண்டும் என முதல் குடும்பம் சமயம் பார்த்து காத்திருந்து செய்தது போன்று அமைத்துள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்நிலையில் திமுகவின் மூத்த தலைவர்களான கே என் நேரு, துரைமுருகன், பொன்முடி ஆகியோரை திமுக தலைமை குடும்பம் ஓரம் கட்டி வரும் நிலையில், கடும் அதிருப்தியில் இருக்கும் 3 முக்கிய தலைவர்களும் வரும் 2026 தேர்தல் நெருக்கும் நேரத்தில் முதல் குடும்பத்துக்கு எதிராக போர் கொடி தூங்கு வாய்ப்புள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here