மனம் திருந்திய இளைஞரை மன்னித்து போலீஸ் புகாரை வாபஸ் பெற்ற திமுக எம்பி செந்தில்குமார்.!

0
Follow on Google News

தருமபுரி திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் சமூக ஊடகத்தின் வழியே பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார், வறுமையில் உள்ளவர்கள் மருத்துவ உதவிக்காக பணம் தேவை போன்ற யாருக்காவது உதவி தேவை என்றால், அவர்களுக்காக சமூக வலைதளத்தின் வாயிலாக நிதி திரட்டி அவர்களுக்கு உதவி செய்து வருகிறார், இது போன்று பலருக்கு உதவி செய்து அரசியலுக்கு அப்பாற்பட்டு பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இதே போன்று திமுகவுக்கு எதிராக அல்லது தனக்கு எதிராக அநாகரிகமாக யாராவது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தால், உடனே தமிழ்நாடு கவல் துறைக்கு சமூக வலைதள வாயிலாக புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவதை வாடிக்கையாக செய்து வருகிறார், இந்நிலையில் அருண் என்கிற இளைஞன் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்த கார்ட்டூன் புகைப்படத்தை பதிவு செய்து செத்ததுக்கு அப்புறமும் விடாமல் விரட்டி விரட்டி வெளுக்கிறார்கள் என்றால் இந்த நயவஞ்சகன் செய்த அயோக்கியத்தனமும் துரோகங்கள் எவ்வளவு இருக்கும் என பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவை செய்த அருண் என்கிற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கவல்துறைக்கு இணைய தள வாயிலாக புகார் கொடுத்திருந்தார் திமுக எம்பி செந்தில்குமார். இதனை தொடர்ந்து புகாருக்கு உள்ளான பதிவு செய்திருந்த இளைஞர் அருண், உணர்ச்சிவசப்பட்டு தெரியாமல் செய்வது தவறு.. அந்த பதிவை நீக்கிவிட்டேன் . நான் செய்தது தவறு அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. இதன்பிறகு இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.. தயவுசெய்து மன்னிக்கவும் என திமுக எம்பி செந்தில்குமாரிடம் மன்னிப்பு கோரினார்.

இதனை தொடர்ந்து அந்த இளைஞரின் மன்னிப்பை ஏற்று, மீண்டும் இது போன்று தவறு செய்யமாட்டேன் என உறுதியளித்த அருண் என்கிற இளைஞன் கேட்டு கொண்டதின் பெயரில் அவர் மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார் திமுக எம்பி செந்தில்குமார். மேலும் தனிமனித தாக்குதல், அநாகரிகமாக பேசுவது வேண்டாம், ஆரோக்கியமாக விவாதம் செய்வோம் என அந்த இளைஞருக்கு அறிவுரை வழங்கியுள்ளார் செந்தில்குமார் எம்பி.

இதனை தொடர்ந்து தன்னை மன்னித்து புகாரை வாபஸ் பெற்ற செந்தில்குமார் எம்பி க்கு நன்றி தெரிவித்த அந்த இளைஞர், கண்ணியமான பதிவுகளை மட்டுமே இனி பதிவு செய்வேன் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். எனது தவறை திருத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். என நன்றி தெரிவித்துள்ளார்.