தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்று சொல்லும் அளவிற்கு திமுக அமைச்சர்கள் தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் சிக்கி வருகிறார்கள். அதாவது திமுக அமைச்சர்கள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளின் நீதிமன்றம் இதற்கு முன்பு விடுவித்ததை ஒவ்வொன்றாக தற்பொழுது நீதிமன்றம் ரத்து செய்து வருவதை பார்க்க முடிகிறது.
இதில் முதலில் திமுகவின் பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்த வழக்கில் துறைமுருகனை விடுவித்த தீர்ப்பை ரத்து செய்து மேலும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம், அதனைத் திமுக அமைச்சர்களில் ராஜ கண்ணப்பன், எம் ஆர் கே பன்னீர்செல்வம் மேலும் திமுகவின் மூத்த அமைச்சரான ஐ பெரியசாமி ஆகியோர் இதற்கு முன்பு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கித் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திமுக அமைச்சர்களில் மொத்தம் 34 அமைச்சர்களில் சுமார் 17 அமைச்சர்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை பிடியில் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்து மூன்று மாதத்தில் மூன்று அமைச்சர்கள் பதவி பறி போகலாம் என்று கூறப்படுகிறது. அதாவது எப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகிய இருவரும் அமைச்சர் பதவிகளை இழந்தார்களோ அதே போன்று அடுத்தடுத்து மூன்று மாதங்களில் மூன்று முக்கிய அமைச்சர்கள் திமுகவின் தங்களுடைய அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த டாஸ்மாக் அலுவலகங்களின் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் பல ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள. அதில் பல கோடி ரூபாய்க்கு அரசாங்கத்திற்கு கணக்கில் காட்டப்படாமல் பாட்டில்கள் விற்கப்படுகிறது என்கின்ற ஆதாரங்களை அமலாக்கத்துறை கைவசம் சித்தியுள்ளது.
கணக்கில் கட்டப்படாத அந்தப் பணம் எங்கே செல்கிறது என்கின்ற தகவல் அமலாக்கத்துறைக்கு கிடைத்தாலும் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அமலாக்கத்தில் இருக்கிறது, ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பின்பு தான் முழு விவரத்தை அமலாக்கத்துறை முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடும்.
இந்நிலையில் தமிழகத்தில் நடக்கும் அமலாக்கதுறை சோதனைகள் அனைத்தையும் முறையாக வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை, அதனால் தான் யாருக்கும் தண்டனை பெற்று கொடுக்க முடியாமல் அமலாக்கத்துறை திணறி வருகிறது என்றெல்லாம் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
ஆனால் அமலாக்கத்துறை அவர்கள் சரியான வழிகள் தான் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில கால தாமதம் ஆகும் என்று தான் கூறப்படுகிறது. காரணம் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்ற போது அமலாக்கத்துறை தரப்பில் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு. செந்தில் பாலாஜி தரப்பில் என்னதான் நீதிமன்றத்தில் பெரும் வழக்கறிஞரை வைத்து வாதாடினாலும் அந்த வழக்கை மூணு தாமதம் 3 மாதம் தாமதமாக இழுத்துச் செல்ல தான் முடிந்ததை தவிர, அமைச்சர் பதவியை தக்க வைக்க முடியவில்லை. அதே அடிப்படையில் தான் அடுத்தடுத்து மூன்று மாதங்களில் சுமார் மூன்று முக்கிய திமுக அமைச்சர்கள் பதவியை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.