திமுக தலைமை கைவிரிப்பு.! மீண்டும் திமுக எம்எல்ஏ மூர்த்தி போட்டியிட வாய்ப்பில்லையா.? மாற்று வேட்பாளர் யார்.?

0
Follow on Google News

மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றனர் மூர்த்தி, இவர் இரண்டு முறை மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும் தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கிடையில் மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிட திமுக எம்எல்ஏ மூர்த்தி முயன்று வருகிறார், தொடர்ந்து ஒரே தொகுதியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுவிட்டால், அந்த தொகுதியை எளிதாக அவர் தக்க வைத்துக் கொள்ளமுடியும்.

ஆனால் திமுக எம்எல்ஏ மூர்த்தியை பொறுத்தவரை மதுரை கிழக்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, இதற்கு காரணம் தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் யார் யார் போட்டியிட வேண்டுமென முடிவு செய்யும் பணியில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது, அதன் அடிப்படையில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஐபேக் நிறுவனம் நடத்திய ஆய்வில் மக்கள் மத்தியில் திமுக எம்எல்ஏ மூர்த்தி அவர்களுக்கு கடும் எதிர்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இம்முறை மதுரை கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ மூர்த்திக்கு பதிலாக வேறு ஒரு வேட்பாளரை நிறுத்த ஐபேக் நிறுவனம் திமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளது, இந்த தகவல் அறிந்த எம்எல்ஏ மூர்த்தி உதயநிதியை சந்தித்து சீட்டு வாங்க முயற்சித்துள்ளார், ஆனால் உதயநிதி தரப்பிலிருந்து எந்த பதிலும் உறுதியான பதில் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை, இதனைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை அடிக்கடி நேரில் சென்று சந்தித்து மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்காக நச்சரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திமுக தலைமையிடம் பேசியதில், அதற்கு எம்எல்ஏ மூர்த்தி மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாலும், மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது பொதுமக்கள் மத்தியில் இருந்து வருவதும், கட்சி நிர்வாகிகளை கூட அடாவடியாக நடந்து கொள்வது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்துவதுதான் சரி என திமுக தலைமை தெரிவித்துள்ளதாகவும், எம்எல்ஏ மூர்த்தி தொகுதி மாறி மதுரை மேலூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமானால் சீட் வழங்கலாம் ஆனால் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கலாம் என தெரிவித்து எந்த ஒரு உறுதியான தகவலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது

ஆனால் எப்படியும் மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட சீட் வாங்க தொடர்ந்து கே என் நேருவை அடிக்கடி திருச்சி சென்று நேரில் சந்தித்து நச்சரித்து வரும் எம்எல்ஏ மூர்த்தி, அவ்வப்போது கே.என்.நேரு திருச்சியில் இல்லாமல் வெளியூர் பயணம் மேற்கொண்டால் அவர் உடன் ஒரே காரில் திமுக எம்எல்ஏ மூர்த்தியும் சென்று மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் சீட் வாங்க போராடி வருகிறாராம், ஆனால் மீண்டும் மதுரை கிழக்கு தொகுதியில் சீட் பெற்று போட்டியிட்டாலும் அந்த தொகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் அவர் தோல்வி அடையவே பிரகாசமாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிட்டத்தக்கது.