நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மா விலகுவதாக அறிவித்த உடன். திமுகவில் இணைய போகிறாரா.? இல்லை விஜய் கட்சியில் இணைய போகிறாரா என்கிற பரபரப்பு நீடித்து வந்தது, ஏனென்றால், காளியம்மா நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு திமுக தரப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் ஆகிய இருவரையும் தனி தனியாக ரகசியமாக சந்தித்தார் என்கிற தகவல் வெளியானது.
அந்த வகையில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இரண்டு கட்சிகளிலும் காளியம்மா பேச்சுவார்த்தை நடந்தி வந்ததை தொடர்ந்து இரண்டில் எதாவது ஒரு கட்சியில் இணைவார் என்கிற தகவல் வெளியானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் இரண்டாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்பு காளியம்மா நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த உடன் அவர் தமிழக வெற்றி கழகத்தில் தான் இணைய போகிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் காளியம்மாவை தமிழக வெற்றி கழக இரண்டாம் ஆண்டு மேடையில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக இருந்த காளியம்மா உடன் திமுக நடத்திய மிக பெரிய பேரம் தான் அவரை கடைசி நேரத்தில் மனமாற்றம் செய்ய வைத்து தமிழக வெற்றி கழகத்தில் இணைவிடாமல் தடுத்தது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திமுக – த வெ க இரண்டு கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்த காளியம்மா, இறுதியில் ஆதவ் அர்ஜுன் மூலம் த வெ கவில் தனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தால் விஜய் தலைமையை ஏற்று த வெ கவில் இணைய சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அதற்க்கு விஜய் தரப்பு ஓகே சொல்ல, த வெ கவில் காளியம்மா இணைவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் காளியம்மா த வெ கவில் இணைவதற்கு முன்பு, அதாவது கடைசி நேரத்தில் திமுக தரப்பில் இருந்து காளியம்மா தனி கட்சி தொடங்குவதற்கு தேவையா அணைத்து உதவிகளும் திமுக தரப்பில் செய்து தருகிறோம் என பேரம் பேசப்பட்டு, தனி கட்சி தொடங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
காளியம்மா தனி கட்சி தொடங்குவதால் சீமானிடம் இருந்து பலரும் காளியம்மா பக்கம் செல்வார்கள், இதனால் சீமானை பலம் இலக்க செய்து விடலாம், அதே காளியம்மா மீனவர் சமூகத்தின் அடையாளமாக திகழ்வதால், அவரை முன்னிறுத்தி பாஜகவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய வைக்கலாம், என்கிற ஒரே கல்லில் இரன்டு மாங்காய் என்பது போன்று, பாஜக – சீமான் இருவருக்கு எதிராக காளியம்மாள் தனி கட்சி தொடங்க திமுக பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் தனி கட்சி தொடங்க இருக்கும் காளியம்மா, தன்னை மீனவர் சமூகத்தின் அடையாளமாகவும், தமிழ் தேசியத்தை முன்னிருந்தியும் செய்யப்பட இருப்பதாகவும், மேலும் தனி கட்சி தொடங்குவதற்கு முன்பே திமுக கொடுத்த Assignment யை செய்ய தொடங்கிய காளியம்மா, அண்ணாமலை சொல்லாத ஒரு விஷயத்தை மீனவர் சமூகத்தின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் திரித்து பேச தொடங்கிவிட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.
அதாவது சமீபத்தில் பேசிய அண்ணாமலை, மீனவர்கள் நல்லவர்கள், அவர்கள் பாவம் நல்லபடியாக அவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்று வருகிறார்கள், சில சமூக விரோதிகள், மீனவர் என்கிற போர்வையில் கடத்தல் செய்து வருவதாகவும், அதையும் மறுக்க முடியாது, அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என அண்ணாமலை பேசியதை திரித்து மீனவர் சமுகத்தினர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கு வகையில், மீனவர்கள் கடத்தல் செய்ய போகிறார்கள், அவர்கள் கடத்தல் செய்ய சென்றால் இலங்கை கடல் படை இப்படி தான் நடந்தும் என அண்ணாமலை சொன்னது போன்று அண்ணாமலை சொல்லாத ஒரு விஷயத்தை பேசி மீனவர் சமூகத்தின் மத்தியில் காளியம்மா குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளது.
தனியாக கட்சி தொடங்குவதற்கு முன்பு அண்ணாமலைக்கு எதிராக திமுக கொடுத்த Assignment யை செய்ய தொடங்கியுள்ளார் காளியம்மாள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.