அந்தர் பல்டி அடித்த திமுக… தீவிரம் காட்டும் நீதிமன்றம்… சூடு பிடிக்கும் டாஸ்மாக் ஊழல்..

0
Follow on Google News

டாஸ்மாக் நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அமலாக்க துறை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், அடுத்தடுத்து விசாரணையை தொடங்கி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வேலையில் இறங்கியது அமலாதுறை.

இந்த நிலையில் அமலாக்க துறை நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் டாஸ்மாக் நிறுவனம் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறைக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கையில், உடனே உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசு,

இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்து ஒரு வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கை வேறு ஒரு மாநிலத்திற்கு மாற்ற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனமும் தமிழக அரசும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தனர். ஆனால் மனுவை திரும்ப பெறுவதற்கான பிராமண பாத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பிரமாண பத்திரம் செய்து அந்த வழக்கை வாபஸ் வாங்கியது தமிழக அரசு. இதனை தொடர்ந்து டாஸ்மாக் ஊழலிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தீவிரமாக ஆலோசனை நடத்திவரும் திமுக அரசு ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமல் தள்ளாடி வருகிறது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்தக் கூடாது என்கின்ற தமிழக அரசும் ,டாஸ்மாக் நிறுவனமும் தாக்கல் செய்த இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் இந்த வழக்கு அமலாக்க துறைக்கு சாதகமாக சென்று கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று முதலில் நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு பின்பு, அடுத்த முப்பது மணி 30 நிமிடம் கழித்து யாருடன் இடையில் ஆலோசனை நடத்தினார் என்று தெரியவில்லை, தமிழக அரசு சார்பில் தொடுக்கப்பட்ட அமலாக்கத்துறை ரைடு சட்டவிரோதம் என்கின்ற வழக்கின் நிலைப்பாட்டை பொறுமையாக தெரிவிக்கிறோம்.

அதே நேரத்தில் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் அமலாக்கத்துறை, இந்த ரைடின் மூலம் விசாரணை என்கிற பெயரில் அதிகாரிகளுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது, மேலும் நடவடிக்கை எடுக்க கூடாது என்கின்ற வழக்கை தொடர்ந்து நடத்துகிறோம் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் ஒரு 30 நிமிடங்களுக்கு முன்பு வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்த திமுக அரசு, அடுத்த முப்பது நிமிடம் கழித்து தொடர்ந்து வழக்கை நடத்துகிறோம் என்று குழப்பத்தில் இருக்கிறார் திமுக அரசு என்பதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் மூலம் சுமார் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதை வெளிப்படையாக அமலாக்க துறை அம்பலப்படுத்தி உள்ளது என்றால், அவர்களிடம் உறுதியான ஆதாரம் மற்றும், இதில் யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள், இந்த பணம் யார் கைக்கு சென்றது என்கிற முழு தழுவலும் அமலாக்க துறையில் கையில் சிக்கி இருப்பதாகவும், அதனடிப்படையில் வசமாக சிக்கியுள்ள அந்த திமுக அரசு.

இதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்து வருவதை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என ஓடி, அமலாக்க துறை விசாரணையை தாமத படுத்தலாம் என்கிற முயற்சியில் இறங்கினாலும், அதற்கான சாத்தியம் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது, அதிகபட்சம் போனால், அடுத்த ஒரு மாதத்திற்குள் அமலாக்க துறை விசாரணையை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here