தான் ஒரு தன்டோம்னு ஒத்து கொண்டாரா தருமபுரி எம்பி செந்தில்குமார்.? வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்.!

0
Follow on Google News

கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த நேரத்தில் கடந்த மூன்று நாட்களாக டிவீட்டர் பக்கத்தில் பொழுதை கடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார், சமூக வலைத்தளத்தை சுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்து அநாகரிகமாக பதிவு செய்யும் டிவீட்டர் கணக்குகளை சமூக வலைதள மூலம் புகார் தெரிவித்து வருகிறார் தர்மபுரி எம்பி செந்தில்குமார், இதற்கு புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் முதலில் அநாகரிகமாக பதிவு செய்யும் திமுகவினர் மீது புகார் தெரிவிக்க வேண்டும் என பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல்குமார் பதில் அளித்திருந்தார்.

இதற்கு பதில் சொல்ல முடியாத எம்பி செந்தில்குமார் நீங்க யார் என நக்கலாக பதிலளித்திருந்தார். இதற்கு பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், டிவீட்டர் வாயிலாக செந்தில்குமார் எம்பிக்கு பதில் அளித்திருந்தார், அதில் யாரா இருந்தால் உங்களுக்கு என்ன.? சேவை செய்வதற்காக தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்கள், நீங்கள் வனத்தில் இருந்து குதித்து வரவில்லை, இந்த நாட்டுக்காக நீங்க செய்த சேவை என்ன என்று உங்களால் கூற முடியுமா.?

மேலும், உங்களுக்கு வேலை இல்லாததால் டிவீட்டரில் அரசியல் செய்து வருகின்றிர்கள், களத்தில் உங்களுடைய பனி ஒன்றுமில்லை. என காயத்ரி ரகுராம் கேள்விகளுக்கு எனக்கு நிஜமாவே யாருனு தெரியாது, ஆமா நீங்க யார்.? என கேட்ட கேள்விக்கு முறையாக பதில் கூறாமல் மீண்டும் நக்கல் பதிவு செய்தார் தர்மபுரி எம்பி செந்திகுமார். இதற்கு நான் யாரா இருந்த உங்களுக்கு என்ன? என கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்.

மேலும் எனக்கும் உங்களை யார் என்று தெரியாது, நான் யாருன்னு தெருஞ்சி என்ன பண்ண போரிங்க? எப்படியும் ஓன்னும் கிழிக்க போரது இல்ல. என்னை நக்கல் செய்ய நீங்க பிரசாந்த் கிஷோர் போன்றோரை வாடகைக்கு எடுத்தால் கூட நான் சொந்த மூளையுடன் உங்களுக்கு பதிலளிப்பேன் என தெரிவிட்டிருந்தார் காயத்ரி. மேலும் மற்றொரு பதிவில் மக்கள் சேவை செய்ய தான் உங்களுக்கு வாக்களித்தார்கள் என்று காயத்ரி ரகுராம் கேள்விகளுக்கு உங்கள தான் சொல்றாங்க பிரதமர் நரேந்திர மோடி என அவரை நோக்கி கேட்ட கேள்விகளுக்கு பிரதமரை கை காட்டுவது போன்று அமைத்திருந்தது செந்தில்குமார் எம்பி பதிவு.

இதற்கு மிக கட்டமாக பதிலடி கொடுத்துள்ள காயத்ரி ரகுராம், அப்ப நீங்க தன்டோம்னு ஒத்துகிறீங்களா? பிரதமர் மோடியிடம் என்ன கேட்கனும்னு எங்களுக்கு தெரியும். அவர் ஏற்கனவே நாட்டிற்க்கு நிறைய நல்லது செய்து கொண்டு இருக்கிறார். கடந்த மூன்று வருடத்தில் ஒரு எம்பியாக நீங்க என்ன செய்திர்கள் அல்லது உங்கள் மூளை காலியாக உள்ளதா.? உங்களிடம் கேள்வி கேட்ட பதில் சொல்ல முடியாமல் பிரதமர் மோடி மற்றும் என்னை கிண்டல் செய்வது துப்பினால் துடைத்து கொள்வது போன்று உள்ளது என பதில் கொடுத்தார் காயத்ரி ரகுராம்.