காங்கிரஸ் 50 சீட் கூட தேறாது… பாஜக ஆட்சி அமைப்பது உறுதி… பாஜக வெற்றி பெற போகும் தொகுதிகள் எத்தனை தெரியுமா.?

0
Follow on Google News

2024 நாடாளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்றும் 50 முதல் 55 தொகுதிகளில் வெற்றி பெறுவதே சந்தேகம்தான் என்றும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். மேலும் அதற்கான முக்கிய காரணத்தையும் அவர் கூறியுள்ளார். அதாவது 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இதில் ஆறு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்டது. 7ஆவது மற்றும் கடைசி கட்டமாக லோக் சபா தேர்தல் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜூன் 4-ல் ஒரே கட்டமாக ஓட்டு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா அல்லது INDIA கூட்டணி ஆட்சியைப் பிடிக்குமா என இந்தியாவே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அவர்கள் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளை தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் கணிப்பானது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதுக்கு அவர் நடந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்றும், அவர்களுக்கு 100 தொகுதிகளில் வெற்றி கிடைப்பதே சந்தேகம்தான் என்றும் அடித்துக் கூறியுள்ளார்.

அதோடு காங்கிரஸால் மூன்று இலக்க எண்களில் வெற்றி பெற முடியாது என்றும் கூறியுள்ளது INDIA கூட்டணி கட்சிகளுக்கு பெரும் இடியாக வந்து விழுந்துள்ளது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி 100 தொகுதிகளில் வென்றால் பாஜக 300 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருக்காது. மேலும் அவர் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் இதில் பாஜக 240 முதல் 260 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அதாவது NDA கூட்டணியானது 35 முதல் 45 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் கூறியிருக்கிறார். அதாவது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆனது 44 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது, அதேபோல் 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கூடுதலாக எட்டு தொகுதிகளை கைப்பற்றி 52 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கடந்த தேர்தல்களை விட அதிகமான தொகுதிகள் என 55 தொகுதிகளில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் பெற்றாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

மேலும் இந்த தேர்தலில் 400க்கும் அதிகமான சீட் வெற்றி பெறுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் பிரதமர் மோடி மீண்டும் சிறப்பான பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க போகிறார் என்றும் உறுதியாக கூறியிருந்தார். அதேபோல் பிரதமர் மோடி அவர்களும் 2024 தேர்தலில் பாஜகவின் ஹேட்ரிக் வெற்றி உறுதி என நம்பிக்கையோடு கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக பாஜக தலைவர்கள் பத்திரிகையாளர்கள் அரசியல் ஆலோசகர்கள் என பலரும் பாஜகவின் வெற்றி உறுதி என கூறி வருவது, இந்த முறையும் மத்தியில் பாஜக ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.