தொழில் வாய்ப்புகளை தடுக்க முயன்ற ஜோதிமணி.! விரட்டியடித்த கிராம இளைஞர்கள்..தெறித்து ஓடிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.!

0
Follow on Google News

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை பகுதியில் சிட்கோ, சிப்காட் அமைக்கும் பனி நடைபெறுகிறது,இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள மக்கள் சுமார் மூவாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க படுகிறது,இந்நிலையில் இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று, விவசாயம் செய்யமுடியாத நீர் பாசனம் இல்லாத இடமாக தேர்வு செய்து அதற்கான பணிகள் நடைபெறுவதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த தொழில் வளர்ச்சியை தடுத்தும் நிறுத்தும் வகையில் அப்பகுதியில் உள்ள மக்களிடம், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் திமுகவினர், சிட்கோ, சிப்காட் அமைக்கும் பனி நடைபெற்றால், குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை சுற்றுவட்டார பகுதிகளில் நீர் வரத்து குறைந்து விடும், விலை நிலங்கள் பாதிக்கப்படும் இதனால் மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளார்.

இதனைதொடர்ந்து இன்று கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சிட்கோ அமைக்கும் இடத்திற்கு சென்று சுமார் மூவாயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த கூடிய தொழில் வளர்ச்சி பணியை தடுத்து நிறுத்தும் நோக்கில் குஜிலியம்பாறை ஊராட்சி R.கோம்பை பகுதிக்கு சென்ற போது, அங்கே சுற்று வட்டார பகுதியில் உள்ள இளைஞர்கள் ஓன்று கூடி காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை தடுத்து நிறுத்தினர், இதனால் அங்கே இருந்த இளைஞர்களுக்கும் ஜோதிமணிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அங்கே இருந்த இளைஞர்கள் நீங்கள் எம்பியாக பதவி ஏற்று ஒரு வருடத்திற்கு மேலாகி உள்ளது, இந்த தொகுதிக்கு என்ன செய்துள்ளீர்கள், உங்கள் தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தீர்கள் அதை செய்திர்களா.? நீங்களும் எங்களுக்கு உதவி செய்ய மாட்டிர்கள், அரசாங்கம் எங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார், உங்கள் அரசியல் லாபத்துக்காக தடுப்பீர்கள் என அங்கே இருந்த இளைஞர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வசமாக சிக்கி கொண்ட ஜோதிமணி பதில் கூற முடியாமல் திணறினர், ஒரு கட்டத்தில் அங்கே கூட்டத்தில் இருந்த ஒருவர், உங்களுக்கு கமிஷன் கிடைக்கவில்லை என்பதற்காக இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறீர்கள், கரூர் அருகே உங்களுக்கு கமிஷன் வருவதால் தானே அங்கே சட்ட விரோதமாக இயங்கும் கிரஷர் மற்றும் குவாரிகள் இயக்குவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள் என கூற, அந்த இடத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.