வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் மெல்ல சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில் , கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் பெரும்பலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும் என்றே கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து சுமார் 18 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்து, இதில் பாஜக தனித்து 11 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்து இருக்கும் நிலையில் , வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது என்கிற விவாதம் ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில் பாஜக தலைமை அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் வேளைகளில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் VVIP வேட்பாளராக 10 பேர் கொண்ட பட்டியலை பாஜக தலைமை இறுதி செய்துள்ளதாகவும், இந்த VVIP வேட்பாளர்கள் வரும் 2026 சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவார்கள் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 10 பேர் கொண்ட VVIP வேட்பாளர் யார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் போட்டியிடும் தொகுதிகள் STAR தொகுதிகளாக கருதி முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்ய தொடங்கியுள்ளது பாஜக என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் பாஜக மாநில தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் மீண்டும் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். அதற்கு அடுத்ததாக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அதி முக்கிய தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக மத்திய அமைச்சர் எல் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
கடந்த நாடளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்ட பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் வரும் சட்டசபை தேர்தலில் சென்னை தி நகர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறார், மேலும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வானதி சீனிவாசன் மீண்டும் அதே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாகர்கோவில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் MR காந்தி மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். தற்பொழுது பாஜகவில் இருக்கும் முன்னாள் காங்கிரஸ் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, அவர் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக VVIP வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, பாஜக வேட்பாளராக தாமரை சின்னத்தில் மதுரையில் உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிட இருக்கிறார். சமத்துவ மக்கள் கட்சியை களைத்து பாஜகவில் தன்னை இணைத்து கொண்டு, பாஜகவில் பயணித்து கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் பாஜக VVIP பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தூத்துக்குடி அல்லது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த VVIP பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளர் STAR கேண்டிடேட் ஆக , அவர்கள் போட்டியிடும் தொகுதி ஸ்டார் தொகுதியாக கருதி அதிக முக்கிய துவம் கொடுக்க இருக்கிறது பாஜக தலைமை என தகவல் வெளியாகியுள்ளது.