தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்து, அடுத்த பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த மாநில தலைவரை எந்த ஒரு இழுபறி இன்றி நியமித்த டெல்லி பாஜக தலைமை, தமிழக பாஜக தலைவர் மாற்றம் மட்டும் கடைசி வரை இழுத்து சென்று மிக பெரிய பரபரப்புக்கு மத்தியில் நயினார் நாகேந்திரனை தலைவரை நியமித்தது டெல்லி பாஜக தலைமை.
இந்த நிலையில் விரைவில் அடுத்த பாஜக தேசிய தலைவரை நியமிக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வரும் டெல்லி பாஜக தலைமை, மறுப்பக்கம் தமிழக பாஜக தலைமை மாநில நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் பாஜக மாநில அளவில் ஒரே பொறுப்புகளில் தொடர்ந்து இரண்டு முறை இருந்தவர்களுக்கு மீண்டும் அதே பதவி வழங்கப்படாது என்று தெரிவிக்கிறது பாஜக வட்டாரங்கள்.

மேலும் கடந்த காலங்களின் பாஜக முக்கிய பொறுப்புகளை பெற்று கொண்டு, கட்சியின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் யார், தங்களின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்கள் யார் என்கிற பட்டியழும் பாஜக தலைமை கையில் உள்ளது என்றும் , சொந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிக எதிர்ப்புக்கு உள்ள நபர்களுக்கு பொறுப்பு கொடுப்பது, களத்தில் வேலை செய்யும் தொண்டர்கள் விருப்பத்திற்கு எதிரானது, இதனால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிக வெறுப்புக்கு உள்ளான நபர்களுக்கு மீண்டும் எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படாமல் ஓரம் கட்ட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் குறிப்பாக மாநில நிர்வாகத்தில் பொறுப்பு வாங்கி கொண்டு, சம்பந்த பட்ட மாவட்ட தலைவர்களை சுதந்திரமாக வேலை செய்ய விடாமல், அவர்களுக்கு மிக பெரிய குடைச்சல் கொடுக்கும் வகையில் இதற்கு முன்பு செயல்பட்டு வந்த மாநில பொறுப்பில் இருந்த சில முக்கிய புள்ளிகளை அவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் அவர்களின் தலையீடு இல்லாத வகையில், டம்மியாக்கி வீட்டிற்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளது பாஜக தலைமை என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மாவட்ட தலைவர்களுடன் முரண்பாடு இல்லாமல், இணக்கமாக கட்சி பணியாற்ற கூடிய சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்கி , அந்த மாவட்டத்தை வழிநடத்தும் வாய்ப்பை பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் ஒரு சில மாவட்ட தலைவர்கள் தங்களுடைய மாவட்ட தலைவர் பதவியை தக்க வைக்க குறிப்பிட்ட ஒரு சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கு மட்டும் ஜால்ரா அடித்து, கூஜா மட்டுமே தூக்கி கட்சி வளர்ச்சிக்கு வேலை செய்யாமல் தாங்கள் கூஜா தூக்கும் அந்த முக்கிய புள்ளிக்கு வேலை செய்யும் மாவட்ட தலைவர் யார் என்பதை கண்டறிந்து அவர்களை களையெடுக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளது பாஜக தலைமை என தகவல் வெளியாகியுள்ளது.
இதில் உச்சகட்டமாக, இது வரை முக்கிய மாநில பொறுப்புகளில் இருந்து கொண்டு, அவர்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்களுக்கு எதிராக அரசியல் செய்யாமல், அந்த திமுக அமைச்சருடன் கள்ள கூட்டணி வைத்து தங்களை பொருளாதார ரீதியில் வளர்த்து கொண்டது மட்டுமில்லாமல், அந்த மாவட்டத்தில் பாஜகவினர் வேறு யாரும் சம்பந்தப்பட்ட திமுக அமைச்சருக்கு எதிராக அரசியல் செய்யப்படாமல் தடுக்கும் வேலைகளை செய்து வந்த பாஜக முக்கிய புள்ளியின் பெயர் பாஜக தலைமை கைக்கு சென்றுள்ளது.
குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த மாவட்ட திமுக அமைச்சருக்கு எதிராக அந்த முக்கிய புள்ளி எந்த ஒரு பேட்டியும் கொடுத்தது இல்லை, குறிப்பாக அந்த மாவட்ட திமுக அமைச்சர் பல்வேறு அரசியல் ரீதியான சர்ச்சையில் சிக்கினாலும் அந்த அமைச்சருக்கு எதிராக அந்த மாவட்டத்தில் இருக்கும் பாஜகவினரை போராட்டம் ஆர்ப்பாட்டம் நடந்தமால் அந்த திமுக அமைச்சரை பாதுகாத்து, அந்த திமுக அமைச்சருடன் கள்ள கூட்டணி வைத்து வரும் முக்கிய பாஜக புள்ளி ஒருவரை பாஜக தலைமை இந்த முறை எந்த பொறுப்பும் கொடுக்காமல் ஓரம் கட்ட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.