கடந்த சில நாட்களாக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசியலில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் தற்பொழுது அண்ணாமலை அளித்த பேட்டி, மற்றும் டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் அமைத்துள்ளது. எப்போது எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்சாவை சந்தித்து திரும்பினாரோ, அதன் பின்பு எதையும் நேரடியாக பேசாமல், மறைமுகமாக சில விஷயங்களை நாசூக்கா பேசிவிட்டு கடந்து செல்கிறார் அண்ணாமலை.
அந்த வகையில் தற்பொழுது, பாஜக மாநில தலைவர் மாற்றம் செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அண்ணாமலை, நான் எந்தப் போட்டியிலும் இல்லை என மாநில தலைவர் போட்டியில் இல்லை என்பதை சொன்னவர், அடுத்து அண்ணாமலை டெல்லி சென்றார், அவர் ஒருவரைத் தேர்வு செய்தார் என்றெல்லாம் நான் எந்த வம்பிலும் இல்லை என பேசிய அண்ணாமலை.

மேலும் கட்சி நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறேன். இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவன் நான். என்னைப் பொறுத்தவரை, புதிய மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கும்போது நிறைய பேசுவேன் என அண்ணாமலை பேசிய இந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தால், தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மாநில தலைவர் மற்றம் குறித்த விவாதத்திற்கு விடை கிடைத்து விடும்.
அதாவது பாஜகவை பொறுத்த வரை, பாஜக தேசிய தலைவர் , பாஜக மாநில தலைவர் தேர்வு செய்யப்படுவது போட்டி நடத்தி தேர்வு செய்யப்படுவது கிடையாது. இவர் தான் மாநில தலைவர், இவர் தான் தேசிய தலைவர் என்கிற அறிவிப்பு மட்டுமே தான் வெளியாகும், அந்த வகையில் மாநில தலைவர் தேர்வுக்கு போட்டியும் பாஜகவில் நடைபெறவில்லை, அதே போன்று மாநில தலைவர் தேர்வுக்காக யாரும் விருப்ப மனுவும் கொடுக்க படவில்லை.
அதாவது நான் மாநில தலைவர் போட்டியில் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளது, அவர் மட்டுமில்லை யாருமே போட்டியில் இல்லை, காரணம் இங்கே மாநில தலைவர் போட்டியின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவது இல்லை தேசிய தலைமை முடிவு செய்து மாநில தலைவரை அறிவிக்கும், ஆனால் நான் போட்டியில் இல்லை என அண்ணாமலை பேசியதும், அண்ணாமலை யே சொல்லிவிட்டார், அப்படியானால் மாநில தலைவர் மாற்றம் உறுதி என ஒரு தரப்பினர் பரபரப்பை ஏற்படுத்தி வருவதில் உண்மை இல்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
மேலும் தற்போதைய தமிழக அரசியல் சூழலை நன்கு அறிந்த டெல்லி தலைமை, அண்ணாமலையை மாற்றிவிட்டு வேறு ஒரு தலைவரை கொண்டு வருவதில் துளியும் விருப்பம் இல்லை என்றும், அந்த வகையில் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என்பதில் உறுதியாக டெல்லி தலைமை இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் புதிய மாநிலத் தலைவர் தேர்ந்தெடுக்கும்போது நிறைய பேசுவேன் என அண்ணாமலை பேசியது, மீண்டும் இரண்டாவது முறையாக மாநில தலைவராக தான் தேர்தெடுக்க பட்ட பின்பு, இதற்கு முன்பு என்னுடைய அரசியலை விட , பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை தான் நாசூக்கா அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்பதை அரசியலை நன்கு உற்று நோக்குகின்றவர்களுக்கு தெரியும்.
மேலும் பாஜக தலைவராக அண்ணாமலை இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார், அறிவிப்பு வெளியாக தான் தாமதமாகி வருகிறது என பாஜக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.