கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த பின்பு தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருவது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்படுகிறாரா என்பது தான். ஆனால் டெல்லியில் உண்மையிலேயே நடந்தது என்ன என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஐந்து கோரிக்கைகளை வைத்திருக்கிறார். அதில் தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பது முதல் கோரிக்கை, இரண்டாவதாக முதல்வர் வேட்பாளர் நான் தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். மூன்றாவது தாக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எந்தெந்த தொகுதிகள் தர வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.

நான்காவது மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அதிகாரப்பூர்வமாக கூட்டணியை உறுதி செய்வோம், அது மட்டும் இல்லாமல் பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றம் செய்தால் மட்டுமே அதிமுக பாஜக கூட்டணி சுமுகமாக இருக்கும் என்ற கோரிக்கையை அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து எடப்பாடி சந்திப்பு முடிந்த அதற்கு அடுத்த நாளே அண்ணாமலைக்கு டெல்லி வர அழைப்பு விடுத்திருக்கிறார் அமித்ஷா.
டெல்லி சென்ற அண்ணாமலையிடம் எடப்பாடி உடன் நடந்த சந்திப்பு குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தி இருக்கிறார். அப்போது அமித்ஷாவிடம் எடப்பாடி குறித்த பல ரிப்போர்ட்களை புள்ளி விவரத்தோடு தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை. அதில் தமிழ்நாடு அரசியலில் செயலிழந்த எடப்பாடி பழனிச்சாமி, குறிப்பாக தென் தமிழகத்தில் துடைத்து எறியப்பட்ட எடப்பாடியை முன்னிறுத்தி நாம் தேர்தலை சந்திப்பது அது பாஜகவிற்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் இந்தியா முழுவதும் ஒரு பிரதான கட்சியாக ஆளுமையோடு இருக்கும் பாஜக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட, தொடர்ந்து தேர்தல்களில் தோல்விகளை மட்டும் சந்தித்து வரும் எடப்பாடியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது பாஜகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும், மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 9 தொகுதிகளில் பாஜக 20 சதவீதத்திற்கு மேல் வாக்கு வாங்கியதை அமித்சாவிடம் எடுத்துரைத்த அண்ணாமலை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கள நிலவரம் படி தொடர்ந்தால் பாஜகவின் வாக்கு வரும் 2026 இல் மேலும் உயரும் என்றும், மேலும் அதிமுக எடப்பாடி தலைமையிலான அதிமுக மேலும் பலத்த அடி வாங்கி 2026வுடன் அஸ்தவனம் ஆகிவிடும் என்பதையும் தெரிவித்த அண்ணாமலை.
மேலும் தமிழகத்தில் பாஜகவை வீழ்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதே எடப்பாடி நோக்கம் என்பதையும் அமித்சாவிடம் எடுத்துரைத்து இருக்கிறார் அண்ணாமலை. இதனை தொடர்ந்து அண்ணாமலையுடன் நடந்த ஆலோசனைக்கு பின்பு டெல்லி பாஜக தலைமையிடம் ஆலோசனை நடத்திய அமித்ஸாஹ, அதில் தேசிய அளவில் பிரதான கட்சி யாருக்கும் நாம், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போன்று ஒரு மாநில தலைவரை மாற்றினால், இதுவே மாற்ற மாநிலங்களில் முன் உதாரணமாக வந்து நம்முடன் கூட்டணி வைப்பதற்கு மற்ற மாநில கட்சிகளும் கண்டிஷன் போட வந்துவிடுவார்கள்.
அதனால் நம் சுயமரியாதை இழந்து எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் , அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என தன்னுடைய கருத்தை ஆழமாக பாஜக டெல்லி தலைமையில் நடந்த ஆலோசனையில் பதிவு செய்த அமித்சா, உடனே தன்னுடைய துரும்புச்சீட்டான செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்து எடப்பாடிக்கு எதிரான தன்னுடைய ஆட்டத்தை தொடங்கிவிட்டார் அமித்ஷா என்கிறது டெல்லி வட்டாரங்கள்