சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சுமார் 45 நிமிடம் அவரது வீட்டில் காத்திருந்து சந்தித்து பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாஜக உடன் கூட்டணிக்கு தயார், ஆனால் பாஜக தலைவராக அண்ணாமலை தொடர கூடாது, மேலும் கூட்டணி பேச்சுவார்த்தையை டெல்லி தலைமை தான் எங்களிடம் நேரடியாக நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்கள் யாரும் எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கூடாது என்று அமித்சாவிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை வைத்துள்ளார் அதற்கு, அமித்சா, முதலில் அதிமுக – பாஜக கூட்டணியை பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்யுங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக தரப்பில் யார் பேசுவார்கள், மற்றும் மாநில தலைவர் குறித்த முடிவுகளை பாஜக தலைமை முடிவு செய்யும் என அமித்சா தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு எடப்பாடி கூட்டணி குறித்து தேர்தல் நெருக்கும் போது வெளிப்படுத்துவோம், இப்ப என்ன அவசரம் என அமித்ஷாவிடம் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போதே எடப்பாடி சரிப்பட்டு வரமாட்டார், என முடிவு செய்த அமித்சா. எடப்பாடி வைத்த இரண்டு கோரிக்கைகளையும் குப்பையில் வீசுவது போன்று வீசிவிட்டு, உடனே பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி வருவதற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து டெல்லி சென்ற அண்ணாமலையிடம், அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து என்ன சொல்றீங்க என பாஜக டெல்லி தலைமை கேட்க. எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்தால், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன், வரும் 2026 சட்டசபை தேர்தல் முடியும் வரை தமிழக பாஜக உள் விவகாரங்கள், மற்றும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என எதிலும் நான் தலையிட வில்லை.
ஒரு சாதாரண தொண்டராக பாஜகவில் பயணிக்கிறேன் என அண்ணாமலை தெரிவிக்க, அதற்கு டெல்லி பாஜக தலைமை, அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என்றால் தேசிய அளவில் உயர் பதவி அல்லது மத்திய அமைச்சர் வழங்க முன் வந்து இருக்கிறது, அதற்கு எனக்கு எந்த உயர் பதவியும் வேண்டாம், நான் ஒரு சாதாரண தொண்டராக கட்சியின் வளர்ச்சிக்காக பாஜகவில் பயணிக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அமித்சாவை சந்தித்து வந்த அடுத்த நாள் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்தைக்காக அவருடைய மகன் மிதுனை அனுப்பி வைத்து, அமித்சா உடனான சந்திப்பு பாஜக உடன் கூட்டணிக்கான சந்திப்பு இல்லை, அப்பா, தமிழக வெற்றி கழகத்துடன் தான் கூட்டணி வைக்க விரும்புகிறார் என பேச அதற்கு விஜய், தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு முடிவு செய்வோம் என பதில் அளித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி மகன் – விஜய் உடனான சந்திப்பு உளவு துறை மூலம் அமித்ஷா கவனத்துக்கு செல்ல, எடப்பாடி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறுவர் என்று நன்கு புரிந்து கொண்ட அமித்ஷா உடனே செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்த அமித்ஷா, எடப்பாடியை வெளியேற்றிவிட்டு ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் உள்ளது. உங்களுக்கு பாஜக சப்போர்ட்டாக இருக்கும் என் செங்கோட்டையனிடம் பேசி அனுப்பி வைத்துள்ளார் அமித்சா,
அதனை தொடர்ந்து அமித்சா அலுவலகத்தில் இருந்து பாஜக டெல்லி அலுவலகத்திற்கு தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார், அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிற அதிரடி உத்தரவு வந்துள்ளதால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என்கிறது டெல்லி பாஜக வட்டாரங்கள்.