அண்ணாமலையின் அதிரடி ஆப்ரேஷன் ஸ்டார்ட்… தமிழக பாஜகவில் யாரோடு பதவியெல்லாமல் பறிபோக போகிறது தெரியுமா.?

0
Follow on Google News

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திடீரென பாஜக கட்சி நிர்வாகிகளை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில் 66 பாஜக மாநில நிர்வாகிகளும், 66 மாவட்ட தலைவர்களும், 36 மாநில அணி தலைவர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். இந்தக் கட்சிக் கூட்டமானது சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்குவதையொட்டி பூத் ஏஜென்ட்களுக்கான பணிகள் குறித்தும், மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் கட்சியில் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்தும் கலந்தாலோசித்துள்ளனர். அதோடு சில மாநில நிர்வாகிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் அவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்!

மேலும் தேர்தல் முடிவுகள் நெருங்கும் சூழ்நிலையில் அண்ணாமலை கூட்டிய இந்த திடீர் ஆலோசனை கூட்டமானது, எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் களத்தை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்தும் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் பாஜகவானது அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு தமிழகத்தில் பாஜகவானது வளர்ச்சி அடைந்தது, ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளை கதி கலங்க வைத்திருக்கும் சூழ்நிலையில் அண்ணாமலை நடத்திய இந்த திடீர் ஆலோசனை கூட்டமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிந்த பின்பு நடக்கும் முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால் இதில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் மற்றும், வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவரான அண்ணாமலை அவர்கள் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை துவங்கியுள்ளார். தேர்தலுக்கு இன்னும் 500 நாட்களே உள்ளதால் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், வடமாநிலங்களில் தேர்தல் பணிகள், வெற்றிக்கான வியூகம், களத்தில் பணியாற்றுவது உள்ளிட்டவைகளை அங்குள்ள பாஜகவினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால், நமக்கு அது பயனளிக்கும் என்ற அறிவுரையையும் வழங்கியுள்ளார்.

அதோடு நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பூத் கமிட்டி நம்மிடம் பலவீனமாக இருப்பதால் அதனை வலிமைப்படுத்துங்கள் என்றும், மேலும் கட்சி மேலிடம் சார்பில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு செலவு தொகை வழங்குவது உள்ளிட்ட, ஒட்டுமொத்த தேர்தல் செலவுக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சி நிதி வழங்கப்பட்டது.

ஆனால் பல தொகுதிகளில் முறையாக இந்த பணத்தை வழங்காமல் முக்கிய நிர்வாகிகள் பதுக்கி விட்டதாகவும், சில இடங்களில் வேட்பாளர்களை ஏப்பம் போட்டு விட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, அதாவது ஒரு சில வேட்பாளர்கள் சீட் வாங்கி போட்டியிட்டதே வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லை, கட்சி நிதி வரும் அதில் ஒரு தொகையை பதுக்கி விடலாம் என்பதற்காகவே சீட் வாங்கியதாக பாஜக தலைமைக்கு தொண்டர்கள் புகார்களை அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் தேர்தல் முடிந்த கையோடு கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என பிற மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிசியானதால் தற்போது அந்த விவகாரத்தை கையில் எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதோடு கட்சிப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பாளர்கள் மாநில நிர்வாகிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்பி கட்சிக்குள் பல மாற்றங்கள் செய்யவும் ஆலோசனை நடத்தியுள்ளார் என்கிறது பாஜக வட்டாரங்கள்.