கடந்த சில நாட்களாகவே பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து மாற்ற படுகிறார், அவருக்கு பதில் ஒருவர் நியமிக்க படுகிறார்கள் என்கிற தகவல் பரவி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக பாஜக தலைவராக அண்ணாமலை ஒரு வேலை மாற்றம் செய்யப்பட்டால், தமிழக பாஜக தலைமை அலுவலகத்திற்கு முக பெரிய பூட்டை போட்டு இழுத்து மூட வேண்டிய சூழல் தான் உருவாகும் என்பதை தமிழக அரசியல் களத்தை உன்னிப்பாக கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும்.
அதாவது தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்பதற்கு முன்பு, தமிழக அரசியலில் பிரதமர் மோடி என்றால் தமிழக மக்களுக்கு எதிரானவர், தமிழ் மொழிக்கு எதிரானவர், ஏன் தமிழ்நாட்டிற்க்கே எதிரானவர் மோடி என்கிற ஒரு மோடி எதிர்ப்பையும், பாஜக எதிர்ப்பையும் திமுக போன்ற கட்சிகள் கட்டி அமைக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்தது மட்டுமில்லாமல்,

தமிழக இளைஞர்கள், பெண்கள் என தமிழக மக்களை பாஜக பக்கம் திசை திருப்பியவர், நோட்டா கட்சி என்று கிண்டல் செய்யப்பட்ட பாஜகவை, சுமார் 11 சதவிகித வாக்குகளை பெற வைத்து, இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக பாஜகவை உருவெடுக்க வைத்துள்ளார் அண்ணாமலை. மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை உருவாக்கிய பாஜக தலைமையிலான கூட்டணி இன்றளவும் தொடரும் வகையிலும், மேலும் இந்த கூட்டணியில் சில கட்சிகளை கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை.
இது அனைத்தையும் நன்கு அறிந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா வரும் 2026 சட்டசபை தேர்தல் வரை பாஜக தலைவராக அண்ணாமலை தொடர்வார் என்பதில் உறுதியாக இருக்கின்றார். ஆனால் கடந்த சில நாட்களாகவே பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்படுகிறார் என்கிற பொய்யான செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, என்பது குறித்து விசாரித்ததில் இந்த செய்தியை பரப்பி விட்டதே பாஜகவில் இருக்கும் ஒரு சில திராவிட ஏஜெண்டுகள் செய்த வேலை தான் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தற்பொழுது எப்படி பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்ற செய்தால் அதிமுக கூட்டணிக்கு தயார் என்று எடப்பாடி அமித்ஷாவிடம் தெரிவித்து விட்டார், அதனால் அண்ணாமலை மாற்றம் செய்ய இருக்கிறார் என்று பொய்யான செய்தி பரவி வருகிறதோ, அதே போன்று தான் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும் பாஜகவில் இருக்கும் திராவிட ஏஜெண்டுகளால் பரப்பப்பட்டது.
ஆனால் அதெல்லாம் பொய்யான செய்தி என்பது பின்னால் நடந்த சம்பவம் உறுதி படுத்தியது, அதே போன்று தற்பொழுது பாஜக தலைவர் மாற்றம் என்கிற செய்தியும் பொய்யாகும் என்கிறது அரசியல் வட்டாரங்கள். இந்நிலையில் சமீபத்தில் எடப்பாடி டெல்லி சென்ற பின்பு, அடுத்து டெல்லி பாஜக தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை, மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் சென்ற நிலையில்.
தமிழக பாஜகவில் இருக்கும் சில திராவிட ஏஜெண்டுகள் வழக்கம் போல் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் வலது சாரி பத்திரிகையாளர்கள் என்று காட்டி கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு சொம்படிப்பவர்கள் மூலம் பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்ய படுகிறார் என்கிற ஒரு தகவலை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் டெல்லி தலைமை பாஜக தலைவர் அண்ணாமலை தான் 2026 சட்டசபை தேர்தல் வரை மாநில தலைவராக தொடர்வார் என்றும், அதே நேரத்தில் அவர் விருப்ப பட்டு ஒரு முடிவை எடுக்கும் போது, அவருடைய விருப்பத்தை ஏற்று கொள்வோம் என்பதில் டெல்லி தலைமை உறுதியாக இருப்பதால். டெல்லியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்த தமிழக பாஜகவில் இருக்கும் சில திராவிட ஏஜெண்டுகள், அண்ணாமலையாக விருப்பப்பட்டு நான் மாநில தலைவர் பதவியில் இருந்து விலக்கினால் தான் உண்டு என்கிற ஏமாற்றத்தில் திராவிட ஏஜெண்டுகள் திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.