“வட இந்தியாவில் தேநீர், பானி பூரி வாங்க அல்லது கழிப்பறைகளைப் பயன்படுத்த இந்தி தெரிந்திருக்க வேண்டும்” என்று இந்தியை ஆதரிக்கும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின், இன்றைய AI யுகத்தில், பள்ளிகளில் எந்த மொழியையும் மூன்றாவது மொழியாக கட்டாயப்படுத்துவது தேவையற்றது என்றும், மேலும் தொழில் நுட்பம் மூலம் பொழிபெயர்பு செய்யும் வசதி தற்பொழுது உள்ளது என தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின்,
மேலும் கூடுதல் மொழி மூலம் மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்க கூடாது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுவதற்கு, அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தை நன்கு கற்க வேண்டும் என தெரிவித்த முதல் முக ஸ்டாலின், பின்னர் தேவை பட்டால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். உண்மையான முன்னேற்றம் புதுமையில் உள்ளது, மொழியியல் திணிப்பில் அல்ல என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்து இருந்த நிலையில்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துறை முருகன் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட அண்ணாமலை. தமிழ்நாட்டில் நடந்து வரும் அவல ஆட்சியை பற்றிய செய்தியை திசை திருப்புவதற்காக இந்தி திணிப்பு என்பதை கையில் பெயிட் டப்பாவுடம் சுற்றுபவர்களை தவிர தமிழக மக்கள் யாரும் ஏற்று கொள்ள வில்லை என்பதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உணர வேண்டும் என தெரிவித்த அண்ணாமலை.
மேலும் திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் குறித்து அண்ணாமலை வெளியிட்ட வீடியோவை சுட்டி காட்டி, திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசிய இந்த வீடியோவை பார்க்க முதல்வர் தவறிவிட்டார் என முதல்வரை நோக்கி கிண்டல் செய்யும் வகையில் தெரிவித்துள்ள அண்ணாமலை, மேலும் எங்களின் கேள்வி மிக எளிமையானது, ஒரு தனியார் பள்ளி மாணவர் மூன்று மொழியை கற்க வாய்ப்பு வழங்கப்படும் பொழுது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது என அண்ணாமலை முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பியது மட்டுமின்றி.
திமுக மூத்த தலைவர் துரைமுருகன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார், அந்த வீடியோவில், பேசத் தெரிந்தவர்கள் மட்டும் தான் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என அந்த உரையில் பேசும் துரைமுருகன், நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றால் முதலில் இரண்டு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஒன்று இந்தி தெரிந்திருக்க வேண்டும். மற்றொன்று ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு மொழியும் தெரியாமல் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு ஒருவர் செல்கிறார் என்றால் அவர் நிலைமை என்ன ஆகும் என்பதை தன்னுடைய வழக்கமான உடல் அசைவுகள் மூலம் கிண்டல் செய்து துரைமுருகன் பேசிய இந்த வீடியோ மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், இந்திக்கு எதிராகவும் அரசியல் செய்துவரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எதிராக ஹிந்தி இந்த அளவுக்கு முக்கியம் மும்மொழி கொள்கை எந்தளவுக்கு தமிழக மாணவர்களுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் வாக்குமூலமாக அமைந்துள்ள துரைமுருகன் பேசியை வீடியோ இதோ…