பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தன்னுடைய பதவியை விட்டு விலகிய அடுத்த சில நாட்களில், ஆன்மீக பயணமாக இமயமலை, உத்தரகாண்ட் போன்ற இடங்களுக்கு சென்று இருக்கிறார். இந்த ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு மீண்டும் தமிழக அரசியலில் மிக தீவிரமாக செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் அல்லது மத்திய அமைச்சர் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்க பட்டது.
ஆனால் அண்ணாமலை தற்போதைக்கு தனக்கு எந்த உயர் பதவியும் வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதால், ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு திரும்ப வந்து பாஜக தலைமை கொடுக்கும் முக்கிய பொறுப்பை ஏற்க்க இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை விலகுவதற்கு என்ன காரணம் , அப்படி பாஜக தலைவரா பதவியில் இருந்து அண்ணாமலை விலக முடிவெடுத்த போது பிரதமர் மோடி அவரிடம் என்ன சொன்னார் என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

பொதுவாகவே அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்பு, பாஜகவின் வளர்ச்சியும் அண்ணாமலையின் வளர்ச்சியும் எடப்பாடி பழனிச்சாமியால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். அதுவே அண்ணாமலை மீது எடப்பாடி க்கு ஈகோ அதிகரிக்க காரணமாகி விட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட முறையில் அண்ணாமலைக்கு எந்த ஒரு ஈகோவும் இல்லை.
கூட்டணி குறித்து டெல்லியில் தன்னுடைய கருத்தை அண்ணாமலை முன் வைக்கும் போது, அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தால் பாஜக வாக்குகள் அதிமுகவுக்கு செல்லும், ஆனால் அதிமுக வாக்குகள் பாஜகவிற்கு வராது என்றும், இதனால் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தாலும், அதிமுகவுக்கு தான் லாபமே தவிர பாஜகவுக்கு இல்லை, குறிப்பாக ஒன்றுபட்ட அதிமுக இல்லாமல் கூட்டணி வைத்தால் பாஜகவிற்கு லாபமே இல்லை என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் டெல்லி தலைமையோ அவர்களுக்கு வேறு ஒரு வழி மூலம் வந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு இன்னும் மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் வாக்கு வங்கி இருக்கிறது. அதனால் அதிமுக இல்லாமல் பாஜக தனியாக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜக நிலை படுமோசமாகிவிடும்.
அனால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு ரிப்போர்ட் டெல்லி தலைமைக்கு சென்று இருக்கிறது. அதன் அடிப்படையில் அதிமுக கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருந்துள்ளது டெல்லி தலைமை. இருந்தாலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவருக்கும் அண்ணாமலை மீது மிக பெரிய மரியாதை இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில் அண்ணாமலைக்கு இரண்டு வாய்ப்பை கொடுத்து இருக்கிறது டெல்லி தலைமை.அதில் ஓன்று தலைவர் பதவியில் இருந்து கொண்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணி உடன் சுமுகமாக செல்ல வேண்டும், இரண்டாவது தலைவர் பதவியை துறக்க வேண்டும், இதில் அண்ணாமலை இரண்டாவது சாய்ஸ் சாய் எடுத்து, அதிமுக உடன் கூட்டணி என்றால், தான் தன்னுடைய பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
இதனை தொடர்ந்து அண்ணாமலை தான் பதவியில் இருந்து விலகுவதாக முடிவு எடுத்ததும், பிரதமர் மோடி நீங்கள் தலைவர் பதவியில் இருந்து விலகுவது எங்களுக்கு வருத்தம் தான், மிகப்பெரிய துரதிஷ்டம் என அண்ணாமலையிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.