பாஜக – அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் இந்த கூட்டணிக்காக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு அவரால் ஈர்க்கப்பட்ட தமிழக இளைஞர்கள் பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். அப்படி இருக்கும் பொழுது பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்கின்ற தகவல் வெளியான உடனையே பொது தளத்தில் பாஜகவுக்கு எதிராக தமிழக மக்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து வந்தனர்.
இவை அனைத்தையுமே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உன்னிப்பாக கவனித்து வந்தவர். அந்த வகையில் அதிமுக பாஜக கூட்டணிக்காக மட்டுமே பாஜக தலைவரை மாற்றம் செய்ய முடிவுக்கு வந்தார் அமித்ஷா, அதே நேரத்தில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

மத்திய உள்துறை அமைச்சர் சொன்ன இந்த முக்கிய பொறுப்பு இது தானா என்கின்ற கேள்வியும் எழுந்த நிலையில், அண்ணாமலைக்கு இரண்டு வாய்ப்புகளை அமித்ஷா தருவதற்கு முன் வந்திருக்கிறார், ஒன்று தேசிய துணைத் தலைவர் அல்லது தேசிய பொதுச்செயலாளர் பதவியை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சி ஆமை வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி ஆகிய தென் மாநிலங்களை உள்ளடக்கிய ஆறு மாநிலங்களுக்கு பொறுப்பாளராகவும் அண்ணாமலையை நியமித்து, தென் மாநில பாஜகவை அண்ணாமலை கையில் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார் அமித்சா என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மாதங்களிலேயே கேரள சட்டசபைக்கான தேர்தல் வரைய இருக்கும் நிலையில்,
அண்ணாமலையின் தென் மாநில அரசியல் ஆட்டத்தை கேரளாவிலிருந்து தொடங்குவதற்கான வியூகத்தை அமித்ஷா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தென் மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலையை பங்கு தேவை என்பதை நன்கு உணர்ந்து அமித்ஷா, தென் மாநிலங்களில் முழுமையாக அண்ணாமலையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
மேலும் தென் மாநிலங்களில் அண்ணாமலைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜக நிர்வாகிகளும் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் தென் மாநிலங்களை அண்ணாமலை கையில் ஒப்படைக்க முன் வந்திருக்கிறார் அமித்ஷா என கூறப்படுகிறது. ஆனால் அண்ணாமலையோ தமிழகத்தை தாண்டி டெல்லி அரசியலுக்கு செல்ல தனக்கு விருப்பம் இல்லை என்றும், டெல்லி அரசியல் தனக்கு செட் ஆகாது என்று தன்னுடைய விருப்பத்தை டெல்லி பாஜக தலைமைக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் அமித்சா அன்புக்கு கட்டுப்பட்டு அண்ணாமலை இந்த பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறுகிய காலத்தில் ஒரு திட்டத்தை வகுக்க மாட்டார். அவருடைய ராஜதந்திரம் அனைத்துமே தொலைநோக்கு பார்வை கொண்டது, அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றி விட்டு எதிர்காலத்தில் அதாவது 2029 தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் தமிழக பாஜக தலைவர் மற்றும் முதல்வர் வேட்பாளராக முன்னிருந்த படுவார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.