தமிழக நலனுக்காக சொந்த கட்சியையே எதிர்த்து அண்ணாமலை போராட்டம்.. வழக்கம் போல் கேலி கிண்டல் செய்து விளையாடும் திமுக எம்பிக்கள்..

0
Follow on Google News

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று புதியதாக கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து, தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ஒரே கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி, தஞ்சாவூரில் தமிழக பா.ஜ.க.வின் விவசாய அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்திருந்தார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் இருப்பது பாஜக ஆட்சி என்றாலும், தமிழக நலன் கருதி தனது சொந்த கட்சிக்கு எதிராக தமிழக பாஜக தலைவர் உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் தமிழக பாஜக மீது நம்பிக்கையை வரவழைத்துள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க. உண்ணாவிரதம் அறிவித்துள்ளது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று கூறுகையில்.யார் உண்ணாவிரதம் இருந்தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை.காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி உள்ளார்.

கர்நாடக முதல்வரின் இந்த பேச்சுக்கு வழக்கம் போல் திமுக எம்பிக்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கேலி கிண்டல் செய்து பொழுதை கடத்தி வருகின்றனர். மேகதாது அணை குறித்து திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் என்ன பேசினார்கள் என தமிழக மக்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில்,மேலும் இதில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? கர்நாடக காங்கிரஸ் மேகதாது விஷயத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இருக்கிறதா? அப்படி சாதகமாக இல்லையென்றால் திமுக அவர்களை எதிர்த்து அறிக்கை விடுமா? என பல கேள்விகள் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் இதற்கெல்லாம் ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு பதிலும் தராமல் தர்மபுரி எம்பி செந்தில் குமார், கர்நாடக முதல்வரின் கேள்விக்கு உங்கள் பதில் என்ன proud Kannadiga sir என்று தமிழக பாஜக தலைவரை கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதே போன்று இது குறித்து தயாநிதிமாறன் கிண்டலாக பேட்டி கொடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் முக்குடைபட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.