அண்ணாமலை வெளியிட்ட புகைப்படம்… கையும் களவுமாக மாட்டிய முதல்வர் முக ஸ்டாலின்..

0
Follow on Google News

கடந்த 2023ம் ஆண்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்றுக்கொண்டிருந்த போது, விஐபி என்ற பெயரில் திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி ஆகியோர் தரிசனம் செய்துள்ளனர். 

மூலவரை வழிபட்ட இவர்கள், உண்ணாமலை அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த போது கருவறை முன்பு நின்றுகொண்டு நகராமல் தரிசனம் செய்துள்ளர் திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அப்போது வரிசையில் இருந்த பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்ய முடியாததால் கூச்சலிட்டுள்ளனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் ஓரமாக நின்று சாமி கும்பிடும் படி ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி இருவரிடம் தெரிவித்து இருக்கிறார்.

அதற்கு திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் ஸ்ரீதரன் நான் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தத்தின் தம்பி குடும்பத்தினர் என்றும் திருவண்ணாமலை நகராட்சியின் முன்னாள் தலைவர் என்று கூறி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி உடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய போது போலீஸ் சீருடையில் இருந்த பெண் காவலரை ஸ்ரீதரன் மனைவி சிவசங்கரி கன்னத்தில் பளாரென கன்னத்தில் அறைந்துள்ளார். 

ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் சீருடையில் இருந்த பெண் காவலரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்ப்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில்  அரசு அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், அவரது மனைவி சிவசங்கரி, இவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட கோயில் ஊழியர் ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு அப்போது செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவண்ணாமலை ஆலயத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை, கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தியதோடு, அது தொடர்பான வழக்கில் தலைமறைவாகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஶ்ரீதரன் என்ற நபர், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் பிறந்த நாளுக்கு பரிசு கொடுக்கும் புகைப்படத்தில், முதலமைச்சரும் சிரித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிறார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்ட அண்ணாமலை. பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரை, காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வரவேற்புபசாரம் அளிப்பது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் என்ன வகையான செய்தியை வெளிப்படுத்துகிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? என முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பிய அண்ணாமலை.

மேலும் தமிழகத்தில், பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், குற்றவாளிகள் சிறிதும் பயமின்றி உலாவுவதும், திமுகவின் நிழலில் இருப்பதால்தான் என்பதற்கு இன்னும் என்ன உதாரணம் வேண்டும்? என்கிற கேள்வியையும் முதல்வர் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு பெண் காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் சிக்கிய திமுக தலைமைச் செயற் குழு உறுப்பினர் ஸ்ரீதரன் , முதல்வர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அடுத்த சில மணி நேரத்தில், முதல்வர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அடுத்த சில மணி நேரத்தில் அண்ணாமலை அந்த புகைப்படத்தை வெளியிடுகிறார் என்றால் திமுகவின் ஓவ்வொரு அசைவுகளையும் அண்ணாமலை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறார் என்பதை உணர்த்துகிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here