அண்ணாமலை – நயினார் புதிய வியூகம்… அடுத்தடுத்து தமிழக அரசியலில் அரங்கேறும் முக்கிய நிகழ்வு…

0
Follow on Google News

தமிழக பாஜக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்று கொண்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்களை சந்திக்கும் நிகழ்வாக சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். புதியதாக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன், அடுத்து என்ன செய்யவேண்டும் என அண்ணாமலையிடம் ஆலோசனை நடத்திய போது, முதலில் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தியுங்கள் என அண்ணாமலை தான் நயினார் நாகேந்திரனை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற, TTV தினகரன், அன்புமணி ராமதாஸ், திருமாறன் ஜி மற்றும் ஜி கே வாசன், போன்ற தலைவர்கள் அண்ணாமலையிடம் மிக நெருக்கமாக இருந்து வருவது கூட்டணிக்கு மிக பெரிய பலமாக உள்ளது, ஆனால் இவர்கள் அனைவரும் புதியதாக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு நன்கு அறிமுகமானவர்கள் தான் என்றாலும், கூட அண்ணாமலை போன்று கூட்டணி கட்சி தலைவர்களிடன் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளார் நயினார் நாகேந்திரன்.

அந்த வகையில் கூட்டணியை பல படுத்தும் வேளைகளில் மிக தீவிரமாக இருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை இருவருக்கும், டெல்லியில் இருந்து அதிரடி உத்தரவுடன் கூடிய அழைப்பு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதாவது வரும் மே மாதம் 24, 25, 26 ஆகிய தேதிகளில் இருவரும் டெல்லி வருவதற்கு அழைப்பு வந்திருக்கிறது.

மூன்று நாட்கள் டெல்லி செல்லும் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து முக்கிய விஷயங்களை பேச இருக்கிறார். அந்த வகையில் எதற்காக அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் இருவரையும் அமித்ஷா டெல்லிக்கு அழைப்பு விடுத்தார், என்ன திட்டமிட்டுள்ளார் என்பது குறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்ததில் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 1 வருடமே இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட கூட்டணி உறுதியாகி விட்டது, ஆனால் இந்த கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும், அதற்கான ஆலோசனை சமீபத்தில் அமித்ஷா மற்றும் அண்ணாமலை இடையில் தொலைபேசி வாயிலாக நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அமித்சாவிடம் ஒரு விஷத்தை தெரிவித்து இருக்கிறார் அண்ணாமலை, அதாவது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, சென்னை அண்ணா சதுரங்கம் தொடங்கி, தமிழக ஆளுநர் மாளிகை வரை தமிழகத்தில் போதை பொருள் அதிகரித்துள்ளது, மற்றும் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக திமுக அரசை கண்டித்து பேரணியாக சென்று, ஆளுநரிடம் தமிழகத்தில் போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், டாஸ்மாக் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுக்கலாம் என அமித்சா விடம் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

உடனே நல்ல ஐடியா வாக இருக்கிறது என வரவேற்ற அமித்சா, இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் இருவரிடம் நேரில் பேசுவதற்காக தான் அமித்சா டெல்லிக்கு நயினார் மற்றும் அண்ணாமலை இருவருக்கும் அழைப்பு விடுத்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆளும் திமுக அரசை எதிர்த்து நடக்கும் இந்த பேரணியில், சீமான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!