அதிமுக பாஜக கூட்டணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ள நிலையில் தமிழக அரசியல் இதற்கு முன்பு பல முனை போட்டி நிலவும் என்றும் அதனால் எளிதாக திமுக வெற்றி பெற்று விடும் என்கின்ற ஒரு தேர்தல் கணக்கு இருந்தது. இந்த நிலையில் திமுக எளிதாக வெற்றி பெற்று விடும் அதனால் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ் கட்சிகள் வழக்கம்போல் திமுக கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு அமைதியாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கின்ற ஒரு நிலை உருவாகியிருந்தது.
குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று முழக்கமிட்ட விடுதலை சிறுத்தை கட்சிகள் சமீப காலமாக எங்கே தொடர்ந்து முழக்கமிட்டால் திமுக கூட்டணியில் இடம் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருந்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணி பலம் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என்கின்ற ஒரு சூழல் தற்பொழுது தமிழக அரசியலில் உருவாகியுள்ளது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் பிரதான கட்சிகளாக இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே நடிகர் விஜய் கூட்டணி கதவை திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார், மேலும் அவர்களுக்கு ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அமைச்சரவையில் இடம் கொடுப்பது மட்டுமில்லாமல் துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்படும் என்கின்ற ஒரு ஆபரையும் வைத்து காத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
இந்த நிலையில் இந்த ஆஃபரை சரியாக பயன்படுத்திக் கொண்டு, தற்பொழுது திமுகவிற்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளது விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசும். இதுவரை ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று முழக்கமிட்டு வந்த விடுதலை சிறுத்தை கட்சிகள் சற்று அமைதியாக இருக்க, தற்பொழுது காங்கிரஸ் கட்சியினர் செல்வத்தகையின் பிறந்தநாள் விழாவில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் செல்வப் பெருந்தகை என்கின்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்து சென்னையில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளார்கள் காங்கிரஸ் கட்சியினர்.
அது மட்டும் இல்லாமல் திருப்பூரில் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் பேனர் வைக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவமும் அரங்கேறியது. சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சிகள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது, அந்த வகையில் வழக்கம் போல் இரண்டு சீட் தருகிறேன் அதுவும் நாங்கள் கொடுக்கற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற திமுகவின் கட்டளையை கூட்டணி கட்சிகள் ஏற்க மறுத்து வருவதாகும்.
அதனால் வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு முன்பே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும். குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சிகளும் காங்கிரசும் இதில் திரை மறைவில் பேசிக்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் விடுதலை சிறுத்தை கட்சிக்குள் சபாநாயகர் பதவி மேலும் அமைச்சரவையில் இரண்டு கட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே இரண்டு கட்சிகளும் திமுகவில் கூட்டணியை உறுதி செய்யவேண்டும்,
இல்லையென்றால் நாங்கள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கைகோர்த்து விடுவோம் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலினை மிரட்டி அடிபணிய வைத்து விட்டு கூட்டணிக்கு முன்பே ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கின்ற உத்தரவாதத்தை கொடுத்தால் மட்டுமே கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் – விசிக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.