கடந்த 2021 சட்டசபை தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் அமித்ஷாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் பாஜக கூட்டணி அமைப்பதற்கு முழு விருப்பம் இல்லை, காரணம் அப்போதே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை உள்ளடக்கிய அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டார்.
இதற்கு அதிமுகவில் இருக்கும் அனைவரும் ஒத்துழைப்பு தந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இறுதிவரை முடியாது என பிடிவாதமாக இருந்தார். இருந்தாலும் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில் கடைசி நேரத்தில் வேண்டா வெறுப்பாக தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க அமித்ஷா சம்மதம் தெரிவித்தார்.

ஆனால் எப்போது 2021 தேர்தல் முடிந்ததோ அதன் பின்பு பாஜக தலைவராக அண்ணாமலையை கொண்டு வந்த அமித்ஷா, திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் அடித்து அரசியல் செய்யுங்கள், குறிப்பாக இனி நமக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி தேவையே இல்லை, பாஜகவை தனிச்சையாக வளர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டுமோ, செய்யுங்கள் உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன் என்று அமித்ஷா கொடுத்த உத்தரவின் பெயரில், திமுகவையும் எடப்பாடி தலைமையில் அதிமுகவையும் ஒரே நேர்கோட்டில் வைத்து அடிக்க ஆரம்பித்தார் அண்ணாமலை.
இதனைத் தொடர்ந்த இதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் அசுர வளர்ச்சி மற்றும் பாஜக மீது மக்கள் மத்தியிலஏற்பட்ட ஈர்ப்பு இவை அனைத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.இந்நிலையில் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலையை மாநில தலைவராக மாற்றிவிட்டால் நாங்கள் கூட்டணிக்கு வருகிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி குட்டிகரணம் போட்டார்.
ஆனால் அதற்கெல்லாம் இறங்கி வரவில்லை அமித்ஷா, அண்ணாமலை தலைமையிலான பாஜக தனித்து ஒரு மெகா கூட்டணி அமைத்து 2024 தேர்தலை சந்தித்து அதிமுகவை பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தது . இந்த நிலையில் வரும் 2026 தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா விரும்புகிறார் . ஆனால் ஒருங்கிணைந்த அதிமுகவாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அமித்சா.
இந்த நிலையில் மீண்டும் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கி விட்டால் நாங்கள் கூட்டணிக்கு வருகிறோம், அதே நேரத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு வாய்ப்பில்லை, மேலும் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் கூட்டணியை உறுதி செய்வோம் என்றெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு எடப்பாடி இன்னும் திருந்தவில்லை, இனிமேலும் திருந்தப் போவதில்லை என்று முடிவு செய்த அமித்ஷா, உடனே செங்கோட்டையனை டெல்லிக்கு வரவழைத்து பிரிந்திருக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டியது உங்கள் கடமை, அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியை வெளியேற்றிவிட்டு செங்கோட்டையன் தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாக்கி பொதுச் செயலாளராக வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடனே செய்யுங்கள் என்று அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது குறித்து அதிமுகவின் இருக்கும் முக்கிய தலைவர்களான எஸ் பி வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியருடனும் அமித்ஷா பேசியதாகவும் செங்கோட்டையனை முன்னிறுத்து அவர்கள் அதிமுகவை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி ஒரு பக்கம் குட்டிக்கரணம் அடிக்க, அதிமுகவிலேயே மாற்றத்தை கொண்டு வந்து விட்டார் அமித்ஷா.
விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு செங்கோட்டையின் தலைமையில் சசிகலா ஓபிஎஸ் அனைவரையும் ஒருங்கிணைந்த அதிமுகவாக பாஜக கூட்டணியில இடம் பெறும் என்றும், இவை அனைத்தும் அண்ணாமலைக்கு தெரிந்தே தான் நடந்து வருவதால், அண்ணாமலை சைலன்டாக பல சம்பவங்களை செய்து வருகிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.