டாஸ்மாக் மெகா ஊழல் தொடர்பாக அமலாக்க துறையின் நடவடிக்கைகள் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில், உதயநிதியின் நெருங்கிய நண்பர்களான ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜூஜூ ஆகியோரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்துவிட்டது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக அடுத்து அமலாக்க துறையின் டார்கெட் உதயநிதி ஸ்டாலின் தான் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் சமீபத்தில் முதல்வரின் டெல்லி பயணம் தமிழக அரசியலில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டது, குறிப்பாக மகன் உதயநிதியை காப்பாற்ற மோடியிடம் முதல்வர் மு க ஸ்டாலின் சரணடைந்து விட்டார். அதனால் தன்னுடைய மகனை காப்பாற்றுவதற்காக பல விஷயங்களில் சமரசம் செய்து கொண்டு மோடியிடம் சமரசம் செய்து விட்டார் மு க ஸ்டாலின் என்றெல்லாம் தகவல் வெளியானது.

ஆனால் இது குறித்து டெல்லி வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் போன்ற பல முதல்வர்களையும் துணை முதல்வரையும் பார்த்து வந்தவர் மோடி, குறிப்பாக முதல்வர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கெல்லாம் அரசியல் அனுபவத்தில் பல மடங்கு உயர்ந்து நிற்பவர் பிரதமர் மோடி.
சுமார் மூன்று முறை முதல்வர் மூன்று முறை பிரதமர் என அரசியலில் கொம்பனாக திகழும் பிரதமர் மோடிக்கு, யார் எதிரி.? யார் துரோகி என்பதை எளிதாக கண்டு பிடிக்க கூடியவர். அந்த வகையில் உண்மையிலேயே தன்னை நம்பி வந்தவர்களை பிரதமர் மோடி கைவிட மாட்டார் என்றும், அதே நேரத்தில் கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்,
தற்பொழுது வெள்ளைக்கொடி ஏந்தி வருவதின் உள்நோக்கம் தன்னுடைய மகனை காப்பாற்றிக்கொள்ள தான் தவிர, நம் மீது உள்ள உண்மையான நட்பு இல்லை என்பதை பிரதமர் மோடி நன்கு உணர்ந்து இருப்பார். அந்த வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமரிடம் தன் மகனை காப்பாற்றிக்கொள்ள என்ன பேசி இருந்தாலும் சரி சரி என்று தான் மோடி தெரிவித்து இருப்பாரே தவிர, அவர் முதல்வருக்கு எந்த ஒரு வாக்குறுதியும் கொடுத்திருக்க மாட்டார் என உறுதி செய்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கர், ரத்தீஷ், விக்ரம் ஜுஜூ, ஆகிய மூவரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்துள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்தில் ரத்தீசை கைது செய்ய அமலாக்கத்துறை தீவிரமாக நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டாஸ்மாக் நிறுவனங்களில் அடுத்தடுத்து விசாரணைக்கும் சோதனைக்கும்தான் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கு.
ஆனால் ரத்தீசை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும், அந்த வகையில் இதற்கு முன்பு டாஸ்மாக் மேலான் அதிகாரி விசாகன் வீட்டில் நடந்த சோதனையில் எடுக்கப்பட்ட ஆவணமே, ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கர் ஆகியோரை கைது செய்வதற்கு போதுமானது என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ரத்தீசை அடுத்த ஒரு வாரத்தில் அமலாக்கத்துறை கைது செய்வதற்காக தீவிரமாக இறங்கி உள்ளது என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில் டாஸ்மாக் ஊழல் தொடர்பான முக்கிய ஐந்து கோப்புகளை அமித்ஷா கைக்கு அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி செய்கிறது. குறிப்பாக மிகப்பெரிய அளவில் மணி லண்டரிங் இதில் நடந்து உள்ளதால், உள்துறை அமைச்சகம் கவனத்திற்கு அமலாக்கத்துறை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் எந்த ஒரு சமரசம் முயற்சிக்கும் அமித்சா வும் மோடியும் இறங்கி வருவதாக இல்லை என்றும், இதில் தொடர்புடைய முதல் குடும்பத்தைச் சார்ந்த அந்த முக்கிய புள்ளி தப்பிக்க வாய்ப்பே இல்லை என்று உறுதிப்படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.