ஜெயலலிதா பார்முலாவை கையில் எடுக்கும் முக ஸ்டாலின்.! பீதியில் திமுகவினர்…

0
Follow on Google News

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது திமுக, கடந்த பத்து வருட போராட்டத்துக்கு பிறகு முதல்வராக அரியணையில் அமர இருக்கிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின், 2011, 2016 சட்டசபை தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை திமுக தோல்வியை தழுவி ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணம் 2006- 2011 திமுக ஆட்சி தான் என்றும், கடந்த பத்து வருட வனவாசகத்தில் முக ஸ்டாலின் நன்கே அறிந்துள்ளார் என அரசியல் நிபுணர்களின் பார்வை.

2006 – 2011 திமுக ஆட்சியில் இருந்த போது, மாவட்டத்துக்கு திமுகவை சேர்ந்த ஒருவர் குறுநில மன்னர்கள் போன்று அதிகாரம் செலுத்தி வந்தார்கள், இவர்களை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி கட்டுக்குள் கொண்டு வர தவறிவிட்டார், இதனால் அந்தந்த மாவட்டத்தில் குறுநில மன்னர்கள் போன்று செயல்படும் திமுக முக்கிய புள்ளிகளின் ஆதரவாளர்கள், நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத் போன்ற அடாவடி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டனர்.

திமுகவினர் இது போன்ற அடாவடி தனத்தில் ஈடுபட்டு வந்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது, இதன் வெளிப்பாடு தான் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுக எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்து படு தோல்வி அடைந்தது, இந்த தேர்தல் முடிவுக்கு பின் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து திமுகவில் நடக்கும் அடாவடி அரசியலுக்கு முற்று புள்ளி வைத்தால் தான் மக்கள் மத்தியில் திமுக மீது நம்பிக்கை வரும் என தனது அண்ணன் முக அழகிரியை ஓரம் கட்டினார் ஸ்டாலின்.

2006 – 2011 வரை திமுகவின் அடாவடி அரசியல், 2011- 2016 வரை தனது சொந்த கட்சியினர் அடாவடியில் ஈடுபட்டால் கூட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவல்த்துறைக்கு முழு சுதந்திரம் அளித்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து 2016 தேர்தலில் தற்போது தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குகிறது என்றும், மேலும் திமுக ஆட்சியில் நடந்த அடாவடிகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்தது.

2006 – 2011 திமுக ஆட்சியில் நடந்த அடாவடித்தனத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, திமுக மீது மக்கள் மத்தியில் ஒரு அச்சஉணர்வை ஏற்படுத்தி தொடர்ந்து பத்து வருடங்களாக ஆட்சியில் இருந்தது அதிமுக, இந்நிலையில் பத்து வருட கடும் போராட்டத்துக்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர இருக்கும் திமுகவில் சில அதிரடி நடவடிக்கைகளில் முக ஸ்டாலின் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி திமுகவினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் ஜெயலலிதா பார்முலாவை கையில் எடுத்துள்ள முக ஸ்டாலின், அடாவடி அரசியலுக்கு திமுக ஆட்சியில் இடமில்லை, மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அடாவடியில் ஈடுபடும் திமுகவினரை கட்சியில் இருந்து அதிரடியாக உடனே நீக்க படுவார்கள், தேர்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் கட்சியில் நற்பெயரை ஏற்படுத்த வேண்டும், எந்த ஒரு காரணத்துக்காகவும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, திமுக அடாவடி கட்சி என மீண்டும் முத்திரை விழுந்து விட கூடாது என்பதில் உறுதியாக ஸ்டாலின் இருப்பதாக, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய தலைவர்கள் அனைவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.