ஆடிட்டர் குருமூர்த்தி – ரஜினி சந்திப்பின் போது ரஜினியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமித்ஷா பேசியது இது தான்.!

0
Follow on Google News

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்தும், அவர் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அவர் பெயரில் அறிக்கை ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து இது குறித்து ரஜினிகாந்த் தனது டிவீட்டர் பக்கத்தில், தனது பெயரில் வெளியான அறிக்கையில் இடப்பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மை, ஆனால் அந்த அறிக்கை நான் வெளியிட்டது கிடையாது என தெரிவித்தார்,

இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா.? மாட்டாரா.? என்ற சதேகம் வலுத்தது, இதனை தொடர்ந்து நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சுமார் 2 மணி நேரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தலின் படியே ஆடிட்டர் குருமூர்த்தி – ரஜனிகாந்த் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சுமார் இரண்டு மணி நேரம் வரை நடந்த இந்த சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்த ஆடிட்டர் குருமூர்த்தி பின் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார், பின் இந்த ஆலோசனையில் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்திடம் பேசியுள்ளார், சுமார் 20 நிமிடம் வரை இருவரும் தொலைபேசியில் பேசியதில், பல்வேறு அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் தமிழகத்தை காப்பாற்ற உங்களின் உதவி எங்களுக்கு தேவை என அமித்ஷா கூறியதாகவும், அதற்கான சரியான நேரம் இது தான் என ரஜினியிடம் தெரிவித்த அமித்ஷா, மேலும் உளவு அமைப்பின் மூலம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷா சேகரித்த தகவல்களை ரஜினிகாந்திடம் எடுத்து கூறியுள்ளார், ஆகையால் வரும் தேர்தலில் உங்களின் வாய்ஸ் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என தெரிவித்த அமித்ஷா அது தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் மிக பெரிய உதவி என தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தேர்தல் நெருங்கிவிட்ட காரணத்தினால் புதிய அரசியல் கட்சி தொடங்குவது மிக பெரிய சவால் என உணர்ந்த ரஜினிகாந்த், வரும் தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயமாக வாய்ஸ் கொடுப்பேன் என ஆடிட்டர் குருமூர்த்தியிடம் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் விரைவில் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும்படி குருமூர்த்தி ரஜினிக்கு அறிவுறுத்தி உள்ளார் எனவும் தகவல் வெளியாகி உள்ளதால், ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 12-12-2020 தனது பிறந்தநாள் அன்று பாஜக ஆதரவு குறித்து அறிவிப்பார் என கூறப்படுகிறது.