தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பூ, வருஷம் 16 தொடங்கி சின்னத்தம்பி, நாட்டாமை என பெரும்பாலும் கிராமம் சார்த்த கதை, குடும்ப செண்டிமெண்ட் கதைகளில் குஷ்பூ நடித்தது தமிழகத்தில் உள்ள பட்டி தொட்டி எங்கும் தனக்கென ஒரு ரசிகர்களை சம்பாரித்தவர் குஷ்பு. குறிப்பாக தமிழக தாய்மார்கள் மத்தியில் குஷ்பு அவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
திமுகவில் இணைந்து அரசியலில் என்ட்ரி கொடுத்த குஷ்பு 2006 முதல் 2011 வரை கருணாநிதி முதல்வராக இருந்த போது திமுகவில் நடிகை குஷ்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தாலும், அவருக்கான சரியான அங்கீகாரத்தை திமுக கொடுக்க தவறிவிட்டது, இதற்கு முக்கிய காரணம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் குஷ்புவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுத்தால், எங்கே நம்மளை ஓவர் டேக் செய்துவிட்டு சென்றுவிடுவாரோ என்கிற அச்சம் அப்போது திமுகவில் இருந்த சில முக்கிய தலைவருக்கும் உண்டு என கூறப்படுகிறது.
மேலும் திமுகவில் நிலவிய உள் கட்சி அரசியலால் தானாகவே அக்கட்சியில் இருந்து வெளியேறிய குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார், அனாலும் தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி அரசியலில் காரணமாக அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பூ, மக்கள் மத்தியில் மிக பிரபலமாக குறிப்பாக பெண்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்து குஷ்புவுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காமல் தவற விட்டது திமுக, காங்கிரஸ்.
ஆனால் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு உரிய மரியாதையை கொடுக்கும் வகையில் கடந்த சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது பாஜக, ஆனால் குஸ்பு தேர்தலுக்கு முன்பு சுமார் 6 மாதம் சேப்பாக்கம் தொகுதியை குறி வைத்து தேர்தல் பணியாற்றினார், சேப்பாக்கம் தொகுதியில் குஷ்பு போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்கிற கருத்து கணிப்பும் கூட வெளியானது.
ஆனால், கடைசி நேரத்தில் சேப்பாக்கம் தொகுதி கிடடைக்காமல், ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவுக்கு கிடைத்தது, இருந்தும் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். இருந்தும் குஷ்புவுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கும் வகையில், தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் பதவியை கொடுத்தது பாஜக. குஷ்புவுக்கு தமிழ், தெலுங்கு , ஹிந்தி, ஆங்கிலம், என பல மொழிகள் சரளமாக பேச கூடியவர்.
இதனால் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தை சேர்த்த பெண்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்வு காண்பதில் ஒரு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்புவுக்கு மொழி தடையாக இல்லை. மேலும் அவருக்கு கொடுத்த தேசிய மகளிர் ஆனைய பொறுப்பை சிறப்பாக செய்து பாஜக தலைமையின் பாராட்டையும் பெற்று வருகிறார் குஷ்பு.
இந்நிலையில் பாஜகவின் தேசிய அரசியலில் குஷ்புவுக்கு அதி முக்கியத்துவம் சமீப காலமாக கொடுத்து வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக்த்தில் சென்னையில் எதாவது ஒரு தொகுதி அல்லது திருச்சியில் போட்டியிடும் வாய்ப்பை குஷ்புவுக்கு கொடுக்க பாஜக மேலிடம் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சினிமா துறையில் இருந்து வந்து பிரதமர் மோடி அமைச்சரவையில் அதி முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வரும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி போன்று, தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவைத்து குஷ்புவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது, எதிர்கட்சிகளை பாராளுமன்றத்தில் ஸ்மிரிதி ராணி போன்று தக்க பதிலடி கொடுக்க கூடியவராக இருப்பார் குஷ்பு என்கிற நம்பிக்கையில் உள்ளது டெல்லி பாஜக தலைமை. அந்த வகையில் நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது உறுதி என்கிறது பாஜக வட்டாரங்கள்.