விஜய்க்கு பின்னால் கோடி கோடியாய் பணத்தை கொட்டும் கோடீஸ்வரர்கள்… அந்த தைரியம் தான் விஜய்க்கு..

0
Follow on Google News

நடிகர் விஜய் அரசியலில் இறங்குவது 100 சதவீதம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கட்சிக்கான பெயர் சின்னம் போன்றவற்றை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ளது விஜய் தரப்பு. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் விஜய்யின் அரசியல் என்ட்ரி இருக்க வாய்ப்பில்லை.விஜயின் இலக்கு என்பது வருகின்ற 2026 சட்டசபை தேர்தல்தான்.

அதற்குள் கட்சி தொடங்கி சின்னத்தையும் பெற்று தமிழக முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார் விஜய். வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பு முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் விஜய். அந்தப் படத்தில் இவருடைய அரசியல் கட்சியின் கொள்கை மற்றும் அரசியலுக்கு வருவதற்கான மிகப்பெரிய பில்டப்பான வசனங்கள், குறிப்பாக கூட இருக்கிறவர்கள் விஜயை புகழ்வது போன்று,

நீங்கள் தான் இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும், நீங்கள் தான் முதல்வராக வரவேண்டும் என்று எம்ஜிஆருக்கு எப்படி சினிமா மூலம் பில்டப் கொடுக்கப்பட்டதோ, அதேபோன்ற ஒரு பில்டப் அடங்கிய முழுக்க முழுக்க அரசியல் படத்தில் நடித்துவிட்டு, அந்த படத்துடன் முழு சினிமாவிற்கு பிரேக் விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கா திட்டமிட்டுள்ளார்

தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் விஜய் ரசிகர்கள் பறந்து விரிந்து கிடந்தாலும், அரசியல் களம் என்பது மிகப்பெரிய அதிகார பலத்தையும் பண பலத்தையும் எதிர்த்தே விஜய் விளையாட வேண்டி இருக்கும். அந்த வகையில் ஓட்டுக்கு 5000 கூட கொடுக்க தயாராக இருக்கும் ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியையும் எதிர்த்து செலவு செய்யும் அளவிற்கு விஜய்க்கு பணம் இருக்கிறதா.? என்றால் விஜய் பின்புலத்தில் மிகப்பெரிய கல்வி தந்தையாக வளம் வரும் தொழில் அதிபர்களும், வெளிநாட்டு கோடீஸ்வரர்களும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

அவர்கள் விஜய் அரசியலுக்காக பல கோடி செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்பதால் விஜய்க்கு பண குறித்த எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது, மேலும் விஜயின் எதிர்கால அரசியல் என்பது நேரடியாக திமுகவின் அடுத்த தலைவரா இன்று போற்றப்பட்டுக் கொண்டிருக்கிற உதயநிதி ஸ்டாலின் தான் என்பதை விஜய் உறுதி செய்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினும் சினிமா துறையில் இருந்து வந்தவர், விஜயும் சினிமா துறையில் உள்ளவர். இந்நிலையில் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் விஜய் – உதயநிதி ஸ்டாலின் இருவரில், யாருக்கு ஆதரவு என்கின்ற போட்டியும் 2026 தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரியவரும். மேலும் பல சினிமா துறையினர் அரசியலில் விஜய்க்கு ஆதரவாக ஒரு குரூப்பும், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக ஒரு குரூப்பும் பிரச்சாரம் செய்யவும் தற்போது இருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்.

அதன் காரணமாக தான் விஷால் தன்னுடைய நெருங்கிய நண்பரான உதயநிதி ஸ்டாலினை விட்டு விலகி விஜய்க்கு துணையாக சென்று கொண்டு இருக்கிறார், அந்த வகையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் விஷால் போன்று திரிஷா இன்னும் பல சினிமா துறையினர் விஜய்க்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யவும் தேர்தல் களத்தில் விஜய் கட்சியில் இணைந்து சீட்டு வாங்கி போட்டியிடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.