தமிழக பாஜகவில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தவர் திடீரென பாஜகவில் இருந்து விலகியுள்ளார் காயத்ரி ரகுராம்.
அண்ணாமலைக்கு எதிராக பல சதி திட்டங்களை தீட்டி அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட காயத்ரி திட்டங்கள் அனைத்தும் புஸ்வானமாக போனதை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகி விட்டார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாமலை தலைமையின் கீழ் இருக்கும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் காயத்ரி ரகுராமன்.
தற்பொழுது ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுக பேச்சாளர் சைதை சாதிக், சில மாதங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பூ, நமிதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோரை மிக கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனால் போலீசார் வழக்கு பதிவும் செய்தனர், இதற்கு திமுகவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களின் ஒருவரான கனிமொழி தன்னுடையை கட்சி நிர்வாகியின் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று தன்னுடைய பெருந்தன்மையையும் காட்டி இருந்தார். ஆனால் இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் வரை எடுத்து சென்றார் குஷ்பூ.
புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராக தேசிய மகளிர் ஆணையம் சைதை சாதிக்கு சமன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் ஆஜரான சைதை சாதிக் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக எழுத்துப்பூர்வமானதாக தேசிய மகளிர் ஆணைய தலைவியிடம் வழங்கி இருந்தார்.
தற்பொழுது மன்னிப்பு கேட்டு சென்னை திரும்பி உள்ள சைதை சாதிக், சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது, அந்த வீடியோவில் சைதை சாதிக்கு பேசுகையில் காயத்ரி ரகுராம் சொல்கிறார் அண்ணாமலை என்னை முதுகில் குத்தி விட்டார் என்று, லைட்டை ஆப் செய்து விட்டான் போல என இரட்டை அர்த்தத்தில் முகம் சுளிக்கும் வகையில் அநாகரிகமாக சைதை சாதிக் பேசி இருந்தார்.
சைதை சாதிக் பேசிய இந்த வீடியோவை தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காயத்ரி ரகுராம், தன்னை பற்றி அண்ணாமலை தவறாக பேசியதால் தான் சைதை சாதி போன்றோர்கள் இரட்டை அர்த்தத்தில் என்னை இவ்வாறு பேசுகிறார்கள் என்று சைதை சாதிக் இரட்டை அர்த்தத்தில் பேசியதற்கு கூட அண்ணாமலை தான் காரணம் என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் காயத்ரி ரகுராம்.
இதுவரை காயத்ரி ரகுராம் குறித்து பதிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினால் கூட அந்த கேள்வியை புறக்கணித்து விட்டு கடந்து செல்லும் அண்ணாமலை, பொது இடங்களில் காயத்ரி ரகுராம் பெயரை கூட உச்சரிப்பது கிடையாது அந்த வகையில் யாரோ ஒருவர் காயத்ரி ரகுராமை கீழ்த்தரமாக பேசினால் கூட அதற்கும் அண்ணாமலை தான் காரணம் என காயத்ரி ரகுராம் தெரிவித்து வருவது அண்ணாமலை மீது உள்ள வன்மம் வெளிப்பட்டுள்ளது. இதனால் இதற்கு முன்பு காயத்ரி ரகுராம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே நம்பகத் தன்மையை இழந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.