ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கிய கமல்.! அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்.! எடப்பாடி சரமாரி கேள்வி.

0
Follow on Google News

ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் கமல் அரசியலில் ஜீரோ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் அரசியல் பிரச்சாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும்? 70 வயது வரை நடித்துவிட்டு, ரிடையர்டான காலத்தில் கட்சி தொடங்கியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி தொடங்கலாம். நான் 1974-ல் அரசியலுக்கு வந்தேன். 46 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கிறேன். 1989-ல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ளேன். அவர் நடிப்பில் வேண்டுமானால் கமல் பெரியவராக இருக்கலாம். அரசியலில் ஜீரோ என பதிலளித்தார், மேலும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, எங்களுடைய கூட்டணி தொடர்ந்து இருக்கிறது. நான் ஏற்கனவே தெரிவித்து விட்டேன். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக நிலைப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்கு, நாங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்து விட்டோம். எங்களுடைய கூட்டணி தொடர்கிறது. எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். இன்னும் தேர்தலே அறிவிக்கப்படவில்லை. எங்களுடைய கட்சியில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதனால் எங்கள் கட்சி சார்பாக, முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்துள்ளார்கள்.

மேலும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை பற்றி கேட்ட கேள்விக்கு, புது கொரோனா வைரஸ் தமிழ்நாட்டை பொறுத்தவரை உறுதி செய்யப்படவில்லை. இங்கிலாந்திலிருந்து வந்தவர்களில் 13 நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. ஆர்டிபிசி பரிசோதனை செய்கிறோம். அதில், 3 ஜீன் வரும்போது, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள கொரோனா என்று கண்டறியப்படுகிறது. அதில், இரண்டு ஜீன் மட்டும் வந்தால், இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்கு இருக்கும் என்ற ஐயப்பாட்டின் காரணமாக, அந்த 13 நபர்களின் மாதிரியை புனேவிற்கு அனுப்பியுள்ளோம். அந்த ஆய்வறிக்கைக்குப் பிறகு தான் உறுதி செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

என்னை மன்னிசிடுங்க ! விஜயகாந்தை நேரில் சந்தித்து கதறி அழுத வடிவேலு.! பிரேமலதா என்ன சொன்னார் தெரியுமா.?