தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்..! கட்சியை வளர்க்காமல் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் செயல்பட்ட மாவட்ட தலைவர்களுக்கு ஆப்பு..

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது, மீதம் 16 தொகுதிகளில் தோல்வியை தழுவியது, மேலும் கன்னியகுமாரி நாடாளுமன்ற இடை தேர்தலில் போட்டியிட்ட பாஜக தோல்வி அடைந்தது, இந்நிலையில் 16 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து பாஜக மேல் மட்ட தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது, குறிப்பாக சில மாவட்ட தலைவர்கள் அவர்கள் பதவியை பயன்படுத்தி கட்சியை வளர்க்காமல் பணம் ஓன்று மட்டுமே குறிக்கோள் என செயல்பட்டு வருவதாக புகார் வருவது குறித்த புகார் டெல்லி தலைமை வரை சென்றுள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக பாஜக மேல் மட்ட தலைவர்கள் மத்தியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிக நேரம் பேசப்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு, தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலே தோல்விக்கான ஆய்வு பணியை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து டெல்லி தலைமையிடம் சமர்ப்பிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஆய்வின் முடிவுகள் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்ட பின்பு தான், அந்த ஆய்வறிக்கையின் அடிப்படையை கொண்டு பாஜக மேல் மட்ட தலைவர்கள் மத்தியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

டெல்லிக்கு சென்ற ஆய்வுகளில் சில பாஜக மாவட்ட தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் பதவியை பயன்படுத்தி கட்சியை வளர்க்காமல் பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருவதாகவும், இரு சக்கர வாகனத்தில் வந்து மாவட்ட பதவியை பெற்று கொண்டவர்கள் இன்று சொகுசு கார்களில் வலம் வரும் அளவுக்கு அவர்கள் உயர்ந்துள்ளார். ஆனால், கட்சி எந்த வளர்ச்சியும் இல்லை என்றும்.

மேலும் சில மாவட்ட கட்சி அலுவலங்கள் கட்சிகாக பயன்படுவதை விட அந்த மாவட்ட தலைவர்கள் சொந்த பயன்பாட்டுக்கு தான் உள்ளது, மாவட்ட கட்சி அலுவலகங்கள் ரியல் எஸ்டேட் ஆஃபீஸ் போல செயல்பட்டு வருகின்றனர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒரு சில மாவாட்ட தலைவர்கள் தேர்தல் பணியாற்றவில்லை, மேலும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து வேலை பார்க்க வேண்டாம் என பேசிய ஆடியோ ஆதாரமும் டெல்லிக்கு சென்ற ஆய்வு அறிக்கையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

இந்நிலையில் பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள மாவட்ட தலைவர்களை அதிரடியாக மாற்றம் செய்து புதிதாக ரத்தம் பாய்ச்ச தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் பாஜக நிர்வாகி மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் கட்சி பதவியை பயன்படுத்தி ருசி கண்ட சில மாவட்ட தலைவர்களுக்கு வயிற்றில் புளியை கரைந்தது போன்று உள்ளதாக பாஜக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது குறிப்படத்தக்கது.