The Rook மற்றும் தின சேவல் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு… தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்… இதோ உங்கள் பார்வைக்கு…

0
Follow on Google News

தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நமது குழு கள ஆய்வின் அடிப்படையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த சர்வேயை The Rook நிறுவனமும் தின சேவல் ஊடகமும் இணைந்து நடத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 22,438 நபர்களிடம் நேரடி கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது.

“உங்களுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கு?” “அடுத்த தமிழக முதல்வராக யாரை விரும்புகிறீர்கள்?” போன்ற கேள்விகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

சீட் கணிப்பு படி

அதிமுக – NDA கூட்டணி: 158 முதல் 173 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும்

திமுக கூட்டணி: 56 முதல் 73 தொகுதிகள் கைப்பற்றும் என்றும்

தமிழக வெற்றி கழகம்: 4 முதல் 10 தொகுதிகள் கைப்பற்றும் என்றும்

நாம் தமிழர் கட்சி: 0 முதல் 1 தொகுதி கைப்பற்றும் என்றும் தெரிகிறது

வாக்கு சதவீத கணிப்பு படி,

அதிமுக – NDA கூட்டணி: 40% – 46% வரையும்

திமுக கூட்டணி: 36% – 42% வரையும்

தமிழக வெற்றி கழகம்: 15% – 21% வரையும்

நாம் தமிழர் கட்சி: 3% – 7% வரையும் பெரும் என தெரிகிறது

இந்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த முக்கியமான தகவல்கள் அடிப்படையில், திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கே திரண்டு வருகின்றன. புதிய வாக்காளர்களில் சுமார் 80% பேர் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சி, குறிப்பாக நகர்ப்புற இளைஞர் வாக்குகளில், திமுக கூட்டணிக்கு கணிசமான வாக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

முதல்வர் தேர்வு கருத்துக்கணிப்பில் “அடுத்த தமிழக முதல்வராக யாரை விரும்புகிறீர்கள்?” என்ற கேள்விக்கு கிடைத்த பதில்களின் அடிப்படையில்,

2026ஆம் ஆண்டு தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here