சமூக வலைதளத்தில் மிக பிரபலமாக செயல்பட்டு வரக்கூடியவர் கிஷோர் கே சாமி, அதிமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் கிஷோக்கிய சாமி, இவர் சசிகலாவின் ஆதரவாளர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் என காலத்திற்கு ஏற்ப அதிமுகவின் தலைவர்களை ஆதரித்து வந்தவர். அவருடைய ஆரம்ப கட்ட அரசியல் கருத்துக்கள், பாஜகவை விமர்சனம் செய்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதனால் கிஷோர் கே சாமி திமுகவை எதிர்ப்பதில் மட்டும் தடம் மாறாமல் தான் ஒரு திமுக எதிர்ப்பாளர் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். தன்னுடைய நகைச்சுவை கலந்த பேச்சாலும், சமூக வலைதள பதிவுகளால், திமுகவுக்கு எதிராக கிஷோர் கே சாமி கருத்துக்களை பதிவு செய்து வந்தது, திமுக எதிர்ப்பாளர்களான பாஜக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து இவருக்கு பெரும் ஆதரவு சமூக வலைதளத்தில் உருவானது.
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்த பொழுது மதுரை விமான நிலையத்தில் நடந்த சில சம்பவங்களை குறிப்பிட்டு பாஜகவுக்கு எதிராகவும், அதிமுகவுக்கு ஆதரவாகவும் தன்னுடைய கருத்தை பதிவு செய்து, இதுவரை அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த பாஜகவினர் எதிர்ப்பை கிஷோர் கே சாமி சம்பாரித்து கொண்டார். மதுரை விமான நிலையத்தில் புரோட்டாகால் படி எதிர்கட்சி தலைவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பிரதமர் மோடி வரவேற்பு நிகழ்வில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால், இது குறித்து கிஷோர் கே சாமி கூறுகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக என்கின்ற மாபெரும் இயக்கத்தின் தலைவரை பத்தோடு பதினொன்றாக நிற்க வைத்தது தவறு, இது அண்ணா திமுகவின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால். இதை சரி செய்ய பாஜக முன் வரவில்லை என்றால் கூட்டணியை விட்டு விலகுவதே உத்தமம் என்பது அடிமட்ட அண்ணா திமுக தொண்டனின் எண்ணோட்டம்.
எடப்பாடியார் அதை கருத்தில் கொள்ள வேண்டும். கூட்டணி என்பது தொண்டர்கள் விரும்பி கேட்டு கிடைப்பது, தலைமை திணிப்பதாக அமையக்கூடாது. 2011 இல் தனக்கு முழு உடன்பாடு இல்லை என்றாலும் தொண்டர்களின் விருப்பத்திற்கு செவிமடுத்து தேமுதிகவுடன் கூட்டணி என்று ஒப்புக்கொண்டதாக செல்வி ஜெயலலிதா பதிவு செய்தார். கூட்டணி என்பது கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் கையெழுத்தாகலாம், ஆனால் முடிவும் வெற்றியும் பூத்தளவில் தீர்மானிக்கப்படுகிறது.
தொண்டனுக்கு பிடிக்காத கூட்டணியை திணிப்பது வெற்றியை தேடி தராது. அதிமுக தலைமையை பாரதிய ஜனதா டெல்லி தலைமை நடத்தும் விதம் தொண்டர்களை சோர்வடைய செய்திடும். இது எடப்பாடியார், பன்னீர்செல்வம் என்று இல்லை எல்லாருக்குமே தன்மானத்திற்கு விடப்பட்டுள்ள சவால், தங்க ஊசியாகவே இருந்தாலும் எடுத்துக் கண்ணில் குத்திக் கொள்ள முடியாது இதை சரி செய்ய டெல்லி முயலாத நிலையில் கூட்டணியை விட்டு வெளியேறுவது உத்தமம்.
எடப்பாடியாரை தலைமையாக ஏற்காதவர்களுக்கு அண்ணா திமுகவில் இடம் இல்லை எடப்பாடி யார் தலைமையிலான அண்ணா திமுகவை ஏற்காத கட்சியுடன் கூட்டணியும் இல்லை என்று பாஜகவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாரித்தார் கிஷோர் கே சாமி. இந்நிலையில் தற்பொழுது கிஷோர் கே சாமி கைது செய்துள்ளதற்கு முதல் அரசியல் தலைவராக தன்னுடையை கண்டனத்தை பதிவு செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேன் மக்கள், மேன் மக்கள் தான் என்பதை நிரூபித்துள்ளார்.
அதே நேரத்தில் தனக்கு முட்டு கொடுத்த கிஷோர் கே சாமி கைதுக்கு சிறிய கண்டனம் கூட தெரிவிக்கவில்லை எடப்பாடி பழனிச்சாமி. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், கிஷோர் கே சாமிக்கு என்று ஒட்டு வங்கி இருந்திருந்தால் முதல் ஆளாக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து அவருக்கான ஒட்டு வங்கியை தன் பக்கம் தக்க வைக்க முயற்சி செய்திருப்பார், ஆனால் அவரை ஒரு சமூக வலைதள பிரபலமாக தான் கருதுகிறார் எடப்பாடி, அதே நேரத்தில் திமுக அரசு அடக்குமுறையை யாருக்கு எதிராக கையாண்டாலும் முதல் ஆளாக வந்து குரல் கொடுப்பவர் அண்ணாமலை என்பதை கிஷோர் கே சாமி போன்றோர் உணர வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.