போலீசார் மீது நடிகை பொய் குற்றசாட்டு.. உண்மையை உடைத்த நடிகையின் தோழி.. கேரளாவில் நடந்த சம்பவம்..

0
Follow on Google News

கேரளா : நடிகைகள் பலர் போதை வஸ்துக்களை பயன்படுத்துவதும் திரைப்படவாய்ப்பிற்காக சில அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொல்வதும் என தங்களை பல சந்தர்ப்பங்களில் இழந்து கலாச்சாரசீர்கேட்டின் முதல்காரணியாக இருப்பதாக திரைத்துறையினரே விமர்சித்து வருகின்றனர். வாய்ப்புக்காக ஓகே சொல்வதும் பின்னர் சம்பந்தப்பட்டவர் மீதே பாலியல் வழக்கு தொடர்வதும் கேரளாவில் புயலைகிளப்பிவருகிறது.

இந்நிலையில் கேரள திரையுலகில் துணை கதாபாத்திரத்தில் தலைகாட்டிவருபவர் அர்ச்சனா கவி. இவர் தனது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவு கேரள காவல்துறையையே புரட்டிபோட்டுள்ளது. இந்த அர்ச்சனா கவி நீலதாமரை என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் கடந்த மே 23 அன்று கொச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளார்.

அப்போது அந்த வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மட்டஞ்சேரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் பிஜு சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தியுள்ளார். அந்த ஆட்டோவில் அர்ச்சனா மற்றும் சிலர் இருந்துள்ளனர். அவர்களை எங்கிருந்து வருகிறார்கள் என விசாரித்துள்ளார். உடனிருப்பவர்கள் யார் என்ன உறவு என்றெல்லாம் கேட்டுள்ளார்.

ஒரு காவல் அதிகாரியாக தனது கடமையை பிஜு செய்தபோதும் அவர் தன்னிடம் கண்ணியமற்ற முறையில் நடந்துகொண்டதாகவும் தொழிலுக்கு செல்கிறீர்களா என கேட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கேரள காவல்துறையை தலைகுனிய வைத்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கு காவல்துறை தங்களை எப்படி அர்ப்பணிக்கிறது என தெரிந்தும் அவர்கள் தங்கள் சுகதுக்கங்களை மறந்து மக்களுக்காக சுயநலமின்றி உழைத்தும் இதுபோன்ற நடிகைகளால் அவர்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கப்படுகிறது.

அர்ச்சனாவின் முகநூல் பதிவையடுத்து கொச்சிபோலிஸ் கமிஷனர் நாகராஜு இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டார். அதையடுத்து பிஜு விசாரிக்கப்பட்டார். அர்ச்சனா மற்றும் அவரது தோழிகளிடம் கண்ணியமாகவே நடந்து கொண்டதாகவும் இரவுநேர பணியில் வழக்கமான விசாரணையை மேற்கொண்டதாகும் விளக்கமளித்துள்ளார்.