மாதம் 800 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்த நீட்டா அம்பானி…கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியை திருமணம் செய்தது எப்படி.?

0
Follow on Google News

இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி – நீட்டா அம்பானி தம்பதியினரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மகன் திருமணதின் pre – wedding நிகழ்வு சமீபத்தில் நடந்தது, இந்த நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்து இருந்தார் நீட்டா அம்பானி, இந்த நிகழ்வுக்கு முன்பே ஒரு தகவலை தெரிவித்து இருந்தார் நீட்டா அம்பானி.

அதில், எனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பொறுத்தவரை எனக்கு இரண்டு ஆசைகள் மட்டுமே “முதலாவது நமது பாரம்பரியத்தை கொண்டாட வேண்டும், மற்றொன்று நமது கலை மற்றும் பண்பாட்டிற்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார் நீட்டா அம்பானி, அதே போன்று ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வு பாரம்பரிய படியும், கலை மற்றும் பண்பாட்டை கொண்டாடும் வகையில்,ஆட்டம், பாட்டம் என ஒரே கொண்டாட்டமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் நீட்டா அம்பானி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்து நடனம் ஆடினார், அவருடைய மகன் ஆனந்த் அம்பானி, மருமகள் ராதிகா ஆகியோர் எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துவது போன்று அமைந்து இருந்தது நீட்டா அம்பானியின் நடனம். இந்த நிகழ்வில் நீட்டா அம்பானி உடை மற்றும் மேக்கப் என அனைத்துமே மிக பிரமாண்டமாகவும் அழகாகவும் இருந்தது.

நீட்டா அம்பானி திருமண விழா, பார்ட்டி , பொது நிகழ்வு என எங்கே சென்றாலும், அவரை அழகாக காட்டுவது பிரபல மேக்கப் கலைஞர் மிக்கி காண்டிராக்டர், இந்தியாவின் திறமையான மேக்கப் கலைஞராக அறியப்படும் மிக்கி பல பிரபலங்களுக்கும் ஒப்பனை செய்து வருகிறார். இவருடைய ஒரு மணி நேர சம்பளம் மட்டுமே லட்சங்களுக்கு மேல் என கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டுகளாக இந்த துறையில் இருக்கும் மிக்கி நீடா அம்பானி கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சி என்றாலும் மிக்கி தான் மேக்கப் போடுகிறார்.

இந்நிலையில் மேக்கப் மேன் மிக்கியின் சம்பளம் ஒரு நாளைக்கு 7.5 லட்சம் வரை என்றும், மும்பையில் ஒப்பனை கலைஞர் ஒருவர் வாங்கும் அதிபட்ச கட்டணம் இது என்பது குறிப்பிடதக்கது. பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், கரீனா கபூர் கான், ஐஸ்வர்யா ராய் என இந்தியாவின் டாப் நடிகைகளுக்கு இவர் தான் ஒப்பனை கலைஞர். இந்நிலையில் உலக பணக்காரரான முகேஷ் அம்பானி மனைவி நீட்டா அம்பானி திருமணத்துக்கு முன்பு பள்ளி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.

Narsee Monjee கல்லூரியில் வணிகவியல் மற்றும் பொருளாதார துறையில் பட்டம் பெற்றிருந்த நீட்டா அம்பானி, தனது ஆசிரியர் பணியை தொடங்கியுள்ளார். Sunflower Nursery பள்ளியில் ஆசிரியராக மாதம் 800 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வந்துள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்த நீட்டா அம்பானி. தனது திருமணத்திற்கு முன்பு தனது விருப்பமான ஆசிரியர் பணியை திருமணத்திற்கு பிறகும் தொடர அனுமதிக்க வேண்டும்” என்ற ஒற்றை நிபந்தனையை முகேஷ் அம்பானியிடம் முன்வைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட்டா அம்பானி திருமணத்திற்கு( பிறகும் பல ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ள நிலையில் ஒரு ஆசிரியராக கல்வியின் முக்கிய துவம் குறித்து நன்கு அறிந்திருந்த நீட்டா அம்பானி. கோடிஸ்வரரை திருமணம் செய்த பின்பு, ஏழை மக்களுக்கு பணம் உதவி, பொருள் உதவி செய்தால், அப்போது மட்டுமே பிரட்சனை தீரும், அணல் ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கினால் அவர்கள் வாழ்க்கையே பிரகாசமாக இருக்கும் என்கிற நல்ல எண்ணத்தில், Reliance Foundation Schools என சுமார் 14 பள்ளிகளை நடத்தி வருகிறார் நீட்டா அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.