பிரபல எழுத்தாளர் மாரித்தாஸ், தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வர கூடியவர். 2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்பு, பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான ஒரு மாய பிம்பம் தமிழக்தில் கட்டி எழுப்பப்பட்ட காலகட்டத்தில், சமூக வலைத்தளத்தில் எழுத்து வடிவில் பதிவு செய்து புள்ளி விவரத்துடன் கருத்துக்களை பதிவு செய்து வந்தார்.
புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் இவரின் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு இவருக்கென ஒரு ஆதரவாளர் வட்டம் உருவாக்கியது. மேலும் எழுத்து வடிவில் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வீடியோ வடிவில் வெளியிட வேண்டும் என பலர் மாரிதாஸை வலியுறுத்த வீடியோ வடிவில் தனது கருத்துக்களை தெரிவித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தார் மரித்தாஸ். இதனால் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசியலில் அரங்கேற்றியவர் மரித்தாஸ்.
தொடர்ந்து போலியான கட்டு கதைகளை கட்டமைத்து போலியான வரலாற்றை தமிழக மக்கள் மத்தியில் ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்த திக, மற்றும் திமுக காட்சிகளில் முக திரையை கிழிக்கும் வகையில் மரித்தாஸ் வீடியோ இருந்து வருகிறது. இவரின் வீடியோ திமுக மற்றும் திக போன்ற கட்சிகளுக்கு என்ன செய்வது என திகைத்து நிற்க்க வைத்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக கறுப்பர் கூட்டம் என்கிற பெரியாரிஸ்ட்கள் இந்து கடவுள்களை இழிவாக பேசியதை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் உருவாகி கறுப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் கைது செய்து சிறையில் அடைக்க முக்கிய காரணம் மரித்தாஸ் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ என்றே சொல்லாம். மேலும் நியூஸ் 18 தொலைக்காட்சியில், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் அடிப்படையில் செயல்படுவதாக வீடியோ வெளியிட்டு நெறியாளர் குணசேகரன் மற்றும் செந்தில் ஆகியோர் அங்கிருந்து வெளியேறும் நிலையை தனது வீடியோவால் ஏற்படுத்தியவர் மாரித்தாஸ்.
இந்நிலையில் தொடர்ந்து திமுக மற்றும் திராவிட அரசிலுக்கு எதிராகவும், பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்து வரும் எழுத்தாளர் மாரிதாஸை சமீபத்தில் பாஜக முக்கிய தலைவர் ஒருவர் பாஜக தலைமையின் உத்தரவின் பேரில் மதுரையில் உள்ள மாரிதாஸ் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மரித்தாஸ் பாஜகவில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வருகிற செப் 17ம் தேதி பிரதமர் மோடி பிறந்த தினத்தில் பாஜகவில் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் எழுத்தாளர் மாரிதாஸ் பாஜகவில் இணைவார் என கூறப்படுகிறது. மேலும் அணைத்து கட்சிகளும் தமிழகத்தில் தங்களுக்கென தனி தொலைக்காட்சி வைத்துள்ள நிலையில். பாஜகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதில் இல்லங்கள் தோறும் பாஜக குறித்த செய்திகள் மற்றும் மரித்தாஸ் மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் ஒளிபரப்ப பாஜகவில் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.