மிசா சட்டத்துக்கு அஞ்சாத திமுக, பாஜக பங்குபெறும் டிவி விவாதங்களுக்கு அஞ்சுவது ஏன்.? விவரிக்கிறது சிறப்பு கட்டுரை..

0
Follow on Google News

இந்தி எதிர்ப்பு, மிசா சட்டத்தில் கைது என மிக பெரிய சவால்களை சந்தித்து உருவான கட்சி திமுக, ஆனால் தற்போது பாஜக பங்கேற்கும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுகவினர் பங்கு பெற போவதில்லை என திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு தமிழகத்தில் முதல் முதலில் ஆட்சியை பிடித்தது திமுக.

அதன் பின் 1996 ஆம் ஆண்டு தமிழக மக்கள் மத்தியில் ஜெயலலிதா மீது உள்ள எதிர்ப்பு அலையினால் ஆட்சியை பிடித்தது, பின் 2005 ஆம் ஆண்டு கூட்டணி கட்சிகள் துணையுடன் மைனாரிட்டி ஆட்சி நடத்தியது திமுக , இவ்வாறு எதிப்பு அரசியல் மற்றும் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை பிடித்த திமுக, ஒரு முறை கூட அவர்களின் சாதனைகளை மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டு அல்லது தமிழகத்தில் திமுகவுக்கான ஆதரவு அலையை உருவாக்கியோ ஆட்சி அமைக்கவில்லை.

இதே போன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வெற்றி பெற்ற திமுக, வருகின்ற 2021 சட்டசபை தேர்தலிலும் பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக எதிர்ப்பு அலையை உருவாக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளது. மேலும் திமுகவுக்கான ஆதரவு அலையை மக்கள் மத்தியில் அவர்களால் ஏற்படுத்த முடியாது என்பதால் எதிர்ப்பு அரசியல் மூலம் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திமுக தலைமை.

இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக எதிர்ப்பு அலையை திமுக திட்டமிட்டு உருவாக்கி வைத்திருந்த நிலையில், தேர்தல் முடிவுக்கு பின் தமிழக மக்கள் தாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருவதால், பாஜக எதிர்ப்பு தற்போது பாஜக ஆதரவு அலையாக உருவெடுத்து வருகிறது, மேலும் இதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சி விவாதங்கள் தான் என ஆய்வு அறிக்கை தெரியப்படுத்துகிறது.

இந்நிலையில் பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறுபவர்களில் அக்கட்சியை சேர்ந்த பேராசிரியர் இராம.ஸ்ரீநிவாசன், கே.டி.ராகவன், நாராயணன் திருப்பதி மற்றும் அஸ்வத்தாமன் போன்றோர் கொடுக்கும் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் திமுக பேச்சாளர்கள் திணறுவது மக்கள் மத்தியில் திமுகவுக்கு மிக பெரிய சரிவை நோக்கியும், பாஜகவுக்கு ஆதரவும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் திமுகவில் சிறந்த பேச்சாளர்களை உருவாக்க அக்கட்சி தவறவிட்டது ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

திமுக பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் போன்றோர் மேடையில் பேசும் அநாகரிகமான பேச்சுக்கள் போன்று தற்போது மக்கள் மத்தியில் எடுபடவில்லை, மேலும் மக்கள் தற்போது நாகரிகமான அரசியலை விரும்புவதால், திமுகவினர் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோரை பின்பற்றி பேசுவது மேலும் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தியதை தொடர்ந்து திமுக பேச்சாளர் பிரசன்னா போன்றோரை அந்த கட்சி ஓரம் கட்டியுள்ளது. மேலும் சாதனை என்று சொல்வதற்கு திமுக பேச்சாளர்களிடம் ஏதும் இல்லாதை தொடர்ந்து மிஷா சட்டத்தை எதிர்கொண்ட திமுக இன்று பாஜகவினர் பங்குபெறும் விவாத நிகழ்ச்சியில் பங்கு பெறமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.