தூங்கக்கூட விடாமல் அலைக்கழிக்கப்படும் மாரிதாஸ்…… தற்போதைய மாரிதாஸ் நிலை என்ன.? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்…

0
Follow on Google News

பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நீதிமன்றமாக, உள்நோக்கத்துடன் அலைக்கழித்து வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார், மேலும் அவர் கூறியதாவது, எழுத்தாளர் சமூக ஊடக செயல்பாட்டாளர் நடுநிலையாளர் அரசியல் கட்சி சார்பற்ற தேசபக்தர் திரு மாரிதாஸ் அவர்களை சென்னை எக்மோர் நீதிமன்றத்தில் ஹீயரிங் என்று கூறி தேனியிலிருந்து சென்னை வரச்செய்திருக்கிறார்கள்.

காலை பதினோறு மணிக்கு ஹியரிங் ஆனால் மாலை 5 மணிவரை மாரிதாஸ் அவர்களை நீதிமன்றம் கூட்டிவரவில்லை. போலிஸ் தரப்பு,,, விழுப்புரம் தாண்டியாச்சு,,, செங்கல்பட்டு வந்தாச்சு என கதை,,, வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரையிலிருந்து கோர்ட் வந்திருந்த அவரது குடும்பத்தினர் மாரிதாஸ் அவர்களை பார்க்க முடியாத ஏமாற்றத்தோடு வீடு திரும்பினர்.

தப்ளிக் ஜமாத் விவகாரத்தில் போலிஸ் கஷ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிய ஆளும் தரப்பின் வாதம் நிராகரிக்கப்பட்டது. நியூஸ்18, தப்ளிக் ஜமாத், ஒரு பிரைவேட் கேஸ் என மூன்று வழக்குகள் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாரிதாஸ் அவர்கள் தேனி மதுரை சென்னை திருநெல்வேலி என சரியாக தூங்கக்கூட விடாமல் டெம்போ ட்ராவலரில் தொடர்ந்து உள்நோக்கத்தோடு அலைக்கழிக்கப்படுகிறார்.

மாரிதாஸ் ஒரே வாரத்தில் 2000கிலோமீட்டர் மேல் அழைத்து செல்லப்பட்டு உள்ளார் அதுவும் காவலர் வாகனத்தில் என்பது கவனிக்கத்தக்கது. கருப்பர் கூட்டம் சுரேந்திரன் இதே புழலில் ராஜமரியாதையோடு குண்டாஸில் இருந்தான். தமிழக அரசு காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி மாரிதாஸ் அவர்களை சிறையில் வைத்து துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

கருத்து சுதந்திரத்தை நசுக்க நினைக்கும் திமுக அரசுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மாரிதாஸ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயகப் போராட்டங்களை இந்து மக்கள் கட்சி முன்னெடுக்கும் என்பதை அறிவிக்கிறோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மாரிதாஸ் விடுதலை சாத்தியமா.? மாரிதாஸ் மீது குண்டர் சட்டமா.? CRPC சட்டம் நடைமுறைக்கு சாத்தியமா.?
கார்த்திக் வெங்கடாஜலபதி
இந்து வழக்கறிஞர் முன்னனி மாநில செயலாளர்