ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தலைமையில் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் தலைமையிலான ஒரு குழு நேற்று மறைந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்றது. உடன் பாஜக வழக்கறிஞர் பிரிவு மற்றும் மருத்துவர் பிரிவும் உடன் சென்றிருந்தனர்.
மணிகண்டன் பெற்றோரை சந்தித்த பேராசிரியர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்பும் மணிகண்டன் போலீசாரால் தாக்கப்பட்ட போது நேரில் பார்த்ததாக கூறப்படும் நபர் நடந்ததவற்றை தெரிவித்தார் இவை அனைத்தும் பாஜக தரப்பில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது, அணைத்து தரப்பு ஆதாரங்களையும் சேகரித்து கொண்டது உண்மை கண்டறியும் குழு. இந்த ஆய்வின் போது பேராசிரியர் உடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப நாகராஜன் உடன் இருந்தார்.
பாஜகவின் உண்மை கண்டறியும் குழு சேகரித்த முக்கிய ஆதாரங்களை 16-12-2021 அன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடன் சமர்ப்பிக்க இருக்கிறது. இதன் பின்பு மணிகண்டன் மரணம் குறித்த பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. குறிப்பாக மணிகண்டன் மரணத்துக்கு நீதி கேட்டு இந்தியா முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பாஜக மணிகண்டன் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்துள்ள நிலையில், கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து. தடயவியல் அறிவியல்; குழுவினர் மணிகண்டன் உடல் உறுப்புக்களை ஆய்வு செய்து வழங்கிய இறுதி அறிக்கை மூலம் மணிகண்டன் விஷம் குடித்து இறந்தது தெரிய வந்துள்ளது. அவரை காவல்துறையினர் தாக்கியோ அடித்த உயிர் இழக்கவில்லை என்பதும் தெரிந்தது.
மணிகண்டன் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாஜக உண்மை கண்டறியும் குழு களத்தில் இறங்கி மணிகண்டன் விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து வருவருவதை உணர்ந்து தான் கூடுதல் டிஜிபி மணிகண்டன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் கையில் செய்தியாளர்களை சந்தித்தாக கூறப்படும் நிலையில். இந்த விவகாரம் இனிமேல் தான் விஸ்வரூபம் எடுக்க இருப்பதாக பாஜக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது.